சாலைகள் பனிக்கட்டி ஆவதைத் தடுக்க பீட்ரூட் சாறு!

 
 
 
 Is beet juice the answer to safer roads in icy weather?
 
 
மேலை நாடுகளில் குளிர் காலத்தில் உறை பனி நிலைக்கும் கீழே வெப்ப நிலை செல்வதால் சாலைகளில் பனி விழுந்து பனிக் கட்டியாகி போக்குவரத்தை பாதிக்கும்.  இதற்கென்று பனி வெட்டும் இயந்திரங்களின் மூலம் கட்டிகளை அகற்றுவார்கள்.50,000 காலன் அளவு பீட் ரூட் சாறை சாலைகளில் கொட்டி பனி கட்டி உண்டாவதைத் தடுக்க திட்டமிட்டுள்ளது நியூ யார்க் மாநிலம்.  
 
பீட் ரூட் சாறை உப்புக் கரைசலுடன் சேர்த்து சாலைகளில் தெளிக்கும் போது உறையும் வெப்ப நிலை மேலும் அதிகம் ஆவதால் அதாவது மைனஸ் 0 டிகிரியில் இருந்து மைனஸ் 20 டிகிரி வரை போல அதிகமாவதால் பனி உண்டாவது தவிர்க்கப் படும். 

வழக்கமாக சாதாரண உப்பைத்தான் பயன் படுத்துவார்கள். அதை விட உப்புக் கரைசல் மற்றும் பீட் ரூட் சாறு கலந்த கலவை நச்சுத் தன்மையும் துரு ஏற்படுத்தும் தன்மையும் இல்லாமல் இருப்பதால் சாலைகளில் தெளிக்க் மிகவும் ஏற்றது.  பீட் தயாரிப்பில் இருந்து கிடைக்கும் பீட் சாறு ஒரு உபரி உற்பத்தி பொருள் என்பதால் தாரளமாக கிடைக்கும். தவிர இது ஒரு பசுமை தொழில் நுட்பம். சுற்று சூழலை பாது காப்பதில் பெரும் பங்கு வகிக்கும்

நமது நாட்டில் சாலைகளில் பனிக் கட்டி ஆகும் அளவு வெப்ப நிலை குறையாததால் நமது நாட்டில் சாலைகளில் பனிக் கட்டி ஆகும் அளவு வெப்ப நிலை குறையாததால் இதன் தேவை இங்கு இல்லை. இருந்தாலும் மேலை நாடுகளில் இது தேவையான ஒன்று
 
 

2 comments:

அன்பின் மோகன் சஞ்சீவன் - பீட்ரூட் சாறு இப்படியும் பயன் படுகிறதா - பரவாய் இல்லையே - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நன்றி சீனா!நன்றி சீனா! அறிவியலில் இன்று ஆச்சர்ய மிகு நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன .அதில் இதுவும் ஒன்று. அறிவியல் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள். உங்கள் மேலான பின்னூட்டத்தையும் பதிவிடுங்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More