கா(தல்)மம்

அனைவருக்கும் வணக்கம்.

நேற்று இரவு 7.15 மணிக்கு என் அலைபேசி அழைக்க...

பாண்டியன் மாமாவா ?

யாருங்க நீங்க யார் வேனும் ?

சார் பாண்டியன் மாமாதானே நீங்க ?

ஐயா என்பெயர் கோபாலகிருஷ்ணன்,இது சிதம்பரம்.உங்களுக்கு யார் வேண்டும் ?

சார் பாண்டியன்னு ஒருத்தர் பைக்ஆக்ஸ்ஸிடெண்டாகி அடிபட்டுகிடக்கிறார் அவர் செல்லில் மாமா என்று உங்களின் எண் உள்ளது.வண்டியில் Er.பாண்டியன் என்று உள்ளது என்க.....

ஐயோ.....ஐயா வண்டி Tvs பைக்கா ?

ஆமாங்க...

ஐயா,நிலைமை எப்படி பேசுறாறார்.....

தலையில் அடிபட்டு உள்ளது பேச்சுமூச்சு இல்லை சீக்கரம் வாங்க சார்.

ஐயா எங்கவீட்டு பையன்தான் உடனேவரோம் எங்கயா நடந்தது ?

மாயவரம் பூம்புகார் சாலையில் கீழையூர்.

தொடர்பு துண்டிக்கபட்டது.

வீட்டின்முன்புறம் அமர்ந்துஇருந்த நான் பின்புறம் எழுந்துஓட....

வீடேஓரேகளேபரம்,கலவரமாக நானோநிலைகுலைய......

அதற்குள் பையனின் குடும்பத்தினர் காரில் புறப்பட்டு செல்ல....

இரண்டு மணிநேரம் கடந்து,நான் நிதானமாகி பையன் தந்தையை தொடர்பு கொள்ள...

சிதம்பரம் நெருங்கிவிட்டேன்ப்பா...இரத்தவாந்தி எடுக்கிறது நிற்கவில்லைப்பா...

ஐய்யயோ....

9.40மணிக்கு கொண்டுவந்தால்.....

இராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில்....

தலையில் பலமாஅடிபட்டுள்ளது இதைபார்க்கும்போது திட்டமிட்டசெயலாகதான் தெரிகிறது எனகூறி ஒரளவுதான் முடியும் மேல் சிகீச்சைக்கு பாண்டிச்சேரி செல்லவும் என்றார்கள்.

11.45மணிக்கு அழைத்து சென்றுவிட்டார்கள்.

என்ன திட்டமிட்ட செயலா ?

ஒரேகுழப்பம்.....?

விசாரனைகள் ஆரம்பம்.

காமம்...காதல் என்ற பெயரில்...

இவனுக்குவயது 22 அவ(ங்க)ளுக்கோ வயது 24

இருவரும் ,அவர்ரவர்கள் படிக்கும்போது ஏற்பட்டதாம் இக்காதல்...?

எனக்கு ஒரு சந்தேகம் ?

என் வாழ்கையில் காதலின் ஆழத்தை காமத்தின் எல்லையில் கண்டிருக்கிரேன்.

ஆணால்

காமத்தில் காதல் உண்டா ?

காமம் இல்லாத காதல் உண்டு என்பவர்களே ?

காதலில் காமம் என்பதே இல்லையா ?

இன்றைய தலைமுறையினர் காமத்தின்பால் கொண்டு செய்யும்செயல்களுக்கு காதல் என்று பெயரா ?

சமீபகாலமாக என்னிடம் வருபவர்களில் இந்தபிரச்னைகள் காரணமாக ஆலோசனைகள்  கேட்டுவருபவர்கள்தான் அதிகம்.

நண்பர்களே,

முகநூலில் வேறு இவர்களின் நட்பு பதியபட்டு தங்களின் கைபேசியின் மூலம் தொடர்ந்து வந்துள்ளது.

மேலும்...

பையனோ சாதீய ஈடுபாடுகொண்டு ஜாதிகட்சியில்பிரிந்து சென்று தனிகட்சி துவங்கியவரின் தீவிர ஆதரவாளன்.அதன் காரணமாக ஏற்ப்பட்ட ஈர்ப்புகளின் காரணமாக அடுத்தவீட்டு சகோதரர்களுக்காக மட்டும்தான் செயல்கள் அனைத்தும்.

அந்தோபரிதாபம்....

இன்றோ மாலை 4.40 மணிக்கு...

இதுவரை உயிரின் நிலைக்கு உத்திரவாதம் இல்லை.

சாதீயும் காணோம்,சங்கத்தையும் காணோம்.

செயல்பாடுகளின்காரணமாக சொந்தவீட்டினர்கள்,சொந்தங்கள் யாரும் இல்லை.

உயிர்அனுவுக்கு உருகொடுத்து,உடலாக உருவாக்கி,வளர்த்த அந்த இருஉயிர்கள் மட்டும் உடன்....
3 comments:

vethanaiyAana vishayam.....

கட்சி என்று அலைபவர்கள் சிந்திக்க வேண்டிய விசயம்!

காதல் காமம்
தங்களுக்கு நேரம் இருப்பின் காதலின் ரகசியம் என்ற இந்த குட்டி புத்தகத்தை வாசித்து பாருங்கள்..தங்களின் கேள்விகளுக்கு கட்டாயம் விடை கிடைக்கும் இந்த முகவரியில் புத்தகம் உள்ளது
http://vijayandurai.blogspot.com/2012/05/blog-post.html

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More