நடை முறை வாழ்க்கை பதிவுகள்

 


 ஒவ்வொருவரும் நடை முறை வாழ்க்கையில் அவரவர் தேடலினால் பல விசயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.  அது போல எனது உடல் நலம் மற்றும் வெவ்வேறு அறிவியல் தேடல்களால் பல நடை முறை வாழ்க்கையில் பயன் படும் விசயங்களை அறிந்து கொள்கிறேன். அன்றாட நடை முறை வாழ்க்கையில் என்னிடம் நிறைய எதிர் பார்க்கிறவர்கள் இருப்பதால் என் மேல் இருக்கும் கவனம் அபரிமிதமனதாக  இருக்கிறது . அதனால் நான் அறிந்தவற்றை இங்கே பதிவுகளாக இட்டு வருகிறேன்.

அது போல் தான் எனது பதிவான தீங்கில்லாத சாப்பாட்டு உப்புக்கள் என்ற பதிவு செய்யப் பட்டது. நான் ஒரு பல் பொருள் அங்காடியில் ஒரு குறிப்பிட்ட வகை உப்பு வாங்க தெரிவு செய்த போது அதை எனக்கு எடுத்துக் கொடுத்த அங்கே வேலை பார்க்கும் நபரே சார் இது எதுக்கு வாங்கறீங்க என்று என்னை அரியோ அரி என்று அரித்தெடுத்து விட்டார். உங்கள் அங்காடியில் இதை வைதிருப்பாதல் இங்குள்ள நபர்களுக்கே அது பற்றி தெரியும் என்று கூறி வந்து விட்டேன். இந்த பதிவுகள் இங்கே போடப் போடும் போது  எல்லாரையும் போய் சேர வேண்டும் என்பதற்கே.

கற்றது கைம்மண்ணளவு . கைம்மண் அளவிலேயே கோடானு கோடி அணுக்களும் அறிவும் அடங்கியிருக்கிறது . நன்றி.

5 comments:

நிச்சயம் அனைவருக்கும் சேரும்.

பயனுள்ள பதிவுக்கு நன்றி...நம் ஒவ்வொரு தேடலிலும் நாம் பல செய்திகளை கற்றுக்கொள்கிறோம்

ஒவ்வொரு இடத்திலும் நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளத் தானே வலைபதிவு!உங்கள் நல்ல எண்ணங்கள் எல்லோரையும் சென்றடையும். தொடரட்டும் உங்கள் நற்பணி!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் திரு மோகன்!

பாராட்டு மற்றும் ஊக்குவிப்பிற்கு நன்றி.

உங்கள் பனி சிறக்கட்டும் தொடரட்டும்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More