தமிழக அரசின் இலவச பொறியியல் படிப்பு


கதிர் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்எம்.இ.,)  இரண்டும் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி 19.12.2012 முதல் நடைபெறுகிறது இதில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கபடுகிறது .இது குறித்த தொடக்க விழாவில் கதிர் பொறியியல் கல்லூரியின் முதுபுலத்தலைவர் ( Dean ) மதிப்பிற்குரிய திரு. ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் அவர்கள் அழகு தமிழில்  மாணவர்களுக்கு புரியும் வகையில் இந்த பயிற்சியின் நோக்கத்தையும் தேவையையும் விவரித்து கூறினார். தொடர்ந்து எம்.எஸ்எம்.இ. இயக்குனர் .திரு .பழனிவேல் மற்றும்  இயக்குனர்   சிவசுப்ரமணியன்  ஆகியோர் இன்றைய வேலைவாய்ப்பு பற்றாகுறை ஒரு புறம் இருக்க வேலைக்கு தகுதியில்லாதவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து கொண்டிருகிறது .அதை சமநிலை படுத்தும்  நாம் செயல்பட வேண்டும் என்று கூறினார் மேலும் தமிழக அரசு தரக்கூடிய இலவச பயிற்சிய அனைவரும் பயன்படுத்திக்கொண்டு தொழில் முனைவதற்கான தகுதியை வளர்த்துகொண்டு நம்மையும் நம்மை சுற்றியிருபவர்களையும் பொருளாதாரத்தில் உயர்த்த முன்வர வேண்டும் என்று சிறப்பாக கூறினார்கள் .

பொதுவாகவே நம் மனநிலை எளிதான வேலை அதிக சம்பளம் குளிர் அறைகளில் சுழலும் நாற்காலியில் சாய்ந்து வேலை பார்க்கும் நினைப்பில் தான் மிதக்கிறோம் .ஆனால் அந்த சூழலுக்கு செல்ல உழைப்பு வேண்டும் அல்லது கல்வியில் சிறப்பாக இருக்க வேண்டும் இது இரண்டுமே இன்றைக்கு நம்மால் முழுமையாக செய்ய  முடிவதில்லை அதற்கு காரணம் பெற்றோர்கள் தான் .
 தன குழந்தை சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவர்கள் அவர்களை சோம்பேறிகளாக மாற்றிவருவதை உணருவதில்லை சுலப வேலைகளை மட்டுமே மையமாக கொண்டு அதை நோக்கி மட்டுமே பயணிக்க வைகிறார்கள் கடிவாளம் போட்டது போல செல்லும் இந்த குழந்தைகள் தங்களின் தேவைகளை கூட கடினமாக இருக்கிறது என்று வேறு ஒருவரிடம் ஒப்படைக்கும் அவல நிலையில்  இருக்கிறார்கள் .எல்லோரும் பொறியியல் வல்லுனராகவும் ,மருத்துவராகவும் ,கணினி துறையிலும் மட்டுமே இருந்தால் மற்ற வேலைகளை யார் செய்வார்கள் ? இந்த சமநிலையற்ற தன்மையால்தான் இன்று வேலைவாய்ப்பு குறைவாக இருக்கிறது வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது ஆகவே எல்லா துறைகளும்  கிடைக்கும் போது கற்றுக்கொண்டு நம் பொருளாதாரத்தை மேம்படுத்த நம் குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும் .


பணம் மட்டுமே மையத்தில் இருந்து எல்லோரையும் ஆட்டுவிக்கிறது பணம் படைத்தவன் மட்டுமே பலம் படைத்தவனாக இருக்கிறான் ஆகவே அந்த பணத்தை சம்பாதிக்க படிப்பு மட்டுமே வழியல்ல ஆர்வம் ,உழைப்பு ,தன்னம்பிக்கை இவை வேண்டும் .மேலும் நாம் ஒருவரிடம் வேலை செய்யும் காலத்தை குறைத்து கொண்டு நாம் நாலுபேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய அளவிற்கு வர வேண்டும் என்று  நினையுங்கள் அதற்க்கு வயதோ ,குடும்ப சூழலோ வேறு எந்த தடையும் இல்லை ஆர்வமும் உழைப்பும் மட்டுமே வேண்டும் .


இது போன்ற பயிற்சியை மேற்கொண்டு தமிழக அரசு நமக்கு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி வாழ்கையில் முன்னுக்கு வர முயலுங்கள் நீங்கள் மட்டும் வந்தாம் போதாது உங்கள் நண்பர்களையும் அழையுங்கள் அவர்களுக்கு நீங்கள் காசு பணம் கொடுத்து உதவ முடியாவிட்டாலும் இந்த மாதிரியான தகவல்களை கொடுத்து அவனையும் வாழ்வில் வெற்றி பெற நீங்கள் உதவியாக இருங்கள் .

இந்த பயிற்சி பற்றிய தகவல்களை பெற கீழ்க்கண்ட  அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் 

திரு பாபு . ( உதவி பேராசிரியர் ) -9976077428 
திரு .சதீஸ்குமார்  ( உதவி பேராசிரியர் ) - 9600261001 


(உள்ளத்தின் ஓசை -  (மனிதனும் வரையறைகளும் )5 comments:

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மிக்க நன்றி மலர் நிச்சயம் பார்க்கிறோம்

பணம் பண்ண படிப்பு மட்டுமா..? சம்பளம் மட்டும்தான் வருமாணமா..? பலருக்கு வாழக்கை கொடுக்கவாய்ப்புள்ளதை வெளிட்ட விதம் அருமை.நன்றி.
இனியாவது விளங்குமா இவைகள்...

அருமையான தகவல்கள் மிக்க நன்றி நண்பரே!

தொழில் முனைவோருக்கு பயன்தரும் தகவல் !

தொடர வாழ்த்துகள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More