சாத்தியமான சந்தையில் கைத்தறிபட்டு

 அனைவருக்கும் வணக்கம்.
 கைத்தறி நெசவு  (Hand Loom Weaving) பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த தொழில் ஆகும்.
 (தறி என்பது ஆடைகள் தயாரிக்க பயன்படும் ஒரு ஒருங்கினைந்த    செயல்பாட்டு கருவி) 

 விவசாயிகளை போலவே பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடவைகள் ஐ நெய்யும் நெசவாளிகள் உண்டு.
 கைத்தறி நெசவு நம்தமிழ்நாட்டில் பரவலாக செய்யபட்டுவந்த ஒருமுக்கிய தொழில் ஆகும்.

 தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் மிகமுக்கியமானது பட்டுசேலைகள். திருமணம்,புதுமனைப்புகுதல் மற்றும் மஞ்சள்நீராட்டு,வளையல்அணிவிழா போன்ற நிகழ்ச்சிகளின்போது பட்டுசேலைகள் உடுத்துவதை பெண்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.

 பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பட்டுத்துணிகளை நெய்வதுடன் உலகின் பல நாடுகளுக்கு பட்டு ஏற்றுமதியும் செய்து வந்துள்ளனர்.
 பட்டு கிடைத்தற்கரியபொருளாக,மிகவும் விலைஉயர்ந்த பொருளாகவும் இருந்து வருகிறது.

 வளமான வாழ்க்கைக்கு அடையாளமாக பட்டு ஆடைகள் திகழ்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளிலும்,திருவிழாக்களிலும் பட்டு முதன்மை பெறுகிறது.
 பல தலைமுறைகளாகத் தொடரும் இந்தக் கைவினைக் கலைத்தொழிலான கைத்தறி நெசவுத் தொழில் நம் கிராமங்களின் குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது.

 இத்தகைய பெருமைக்கு உரிய பட்டு நெசவுத்தொழில் மூலபொருட்களின் தட்டுப்பாட்டலும், பட்டுசேலை தயாரிப்பிற்கு பயன்படுத்தபடும் சரிகை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாலும், கைத்தறிபட்டுசேலை உற்பத்தியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 இதனால் நெசவாளர்கள் வேலைகளைதவிர்த்து ஜவுளி ஆலைகளிலும், நிறுவனங்களில் வேலைக்கு செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது. 

 ஆண்களோடு பெண்களும் ஈடுபடும் இத்தொழிலில் புடவை ஒன்றினை நெய்து முடிக்க மூவரின் உழைப்பு தேவை. 

 உறவுகளே,உடுத்த நாம் வாங்கும் ஒரு கைத்தறி பட்டுசேலையால் ஒரு குடும்பம் பயன் பெறும். 

 கைத்தறி பட்டுசேலைகள் வணிகம் இன்று முதல் உங்களுடன்...

 வரும் புது வருடம் அனைவருக்கும் வளமோடு வாழ வழிவகுக்கட்டும்.

 இராதாம்பூர்.வெ.கோபாலகிருஷ்ணன். 
 சுதந்திர வணிக முகவர்.
 மதுரகவி எண்டர்ப்பிரைச்சஸ்
 ( கைத்தறி பட்டுசேலை பிரிவு ) 
 22/10.செ.பி.கோவில் தெரு, 
 சிதம்பரம். 608001.
 அழைக்க ; 9245578085
 அனுக ;  rathampoor@gmail.com

 (  நிலையான தரம் நிறைவான விலை பட்டுசேலைகள் கிடைக்கும் ) 


 

4 comments:

Vaangalam vaanga,
pattu puthu ragam varuma?

வளமான வாழ்க்கைக்கு அடையாளமாக பட்டு ஆடைகள் திகழ்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளிலும்,திருவிழாக்களிலும் பட்டு முதன்மை பெறுகிறது.

பட்டான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பகட்டான பட்டு நெசவு இன்று வந்ததாக இருந்தாலும். அன்றைய நெசவுக்கு பெயர் போன எங்கள் ஊர் நினைவுக்கு வந்து போனது. நன்றிங்க.

உறவுகளே வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்கள் பட்டுசேலைகள் தேவைக்கு மறக்காமல் அடியேனை அழையுங்கள். நிலையான தரம், நிறைவான விலை, விதவிதமான ரகங்கள் அனைத்தும் கிடைக்கும். (பலருக்கு வாழ்க்கையும் சிலருக்கு வருமானமும் கைத்தறி மூலம் கைகூடும்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More