ஆறு வருத்தங்கள்!



இன்னிக்கு வருத்தப் பட விஷயமே இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? வருத்தம் வடிவேலுவின் அக்கா? தங்கை? அண்ணா? தம்பி? அப்போ இந்த செய்தி உங்களுக்கு வருத்தத்தை- இல்லையில்லை- சந்தோஷத்தைத் தரும்.

வருத்தப்படுபவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடந்தது. நாம் எல்லோருமே நம் வாழ்வில் நடந்த 6 விஷயங்களை பற்றி-இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம் என்கிறது இந்த ஆய்வு. 6 வித்தியாசங்கள் போல 6 வருத்தங்கள்!

இதில் முதல் இடம் பெறும் வருத்தம்: நாம் ஆசைபடும் அளவிற்கு பயணம் செய்ய இயலவில்லை என்பதுதான்.

இந்த ஆய்வில் பங்கு கொண்ட எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வேறு விதமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

வேறு வேலை, வேறு துணைவர் இப்படி.

ஐந்தில் ஒரு பெண் தான் தப்பான ஒரு துணைவருடன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் ஆண்களில் வெறும் 10% பேர் மட்டுமே இப்படி நினைப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் சுமார் 2000 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 25% பேர் நம் வாழ்வில் வருத்தம் என்பது இல்லாமல் இருக்க முடியாது, வருத்தமும் சேர்ந்ததே வாழ்க்கை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அதனால் தான் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களும் ஒரு வாரத்திற்கு 2 மணி நேரங்களும் ‘இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்யாமல் போனோமே என்றும் நாம் வருத்தப் பட்டு மாய்கிறோம் என்றும் இந்த ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது.

ஏன் நீங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லை? காரணங்கள் என்ன என்று கேட்டபோது கிடைத்த பதில்கள்:

மூன்றில் ஒரு பங்கு பேர்கள் தங்களிடம் போதுமான பணம் இல்லாததால், தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழமுடியாமல் போயிற்று என்றனர். 25% பேர்கள் தங்கள் விருப்பத்திற்குரியவரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ் முடிய வில்லை என்றனர்.

ஆனால் 32% தங்களுடைய பலவீனமான மனமும் – வலிமையான செயல்பாட்டுத் திறன் இன்மையுமே  - வேறு ஒரு நல்ல வாழ்க்கையை – அதாவது தங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் என்று ஒப்புக் கொண்டனர்.

நமது கனவு வாழ்க்கையை வாழ முடியாமல் தடை செய்யப் பல விதக் காரணங்கள் இருப்பதாக நம்மில் பலரும் நினப்பதே இந்த வருத்தங்களுக்குக் காரணம் என்று இந்த ஆய்வின் டாக்டர் கெயில் ப்ரூவர் கூறுகிறார். இந்த மன நிலையில் ஆசைப் பட்டாலும் அதை நிறைவேற்றக் கூடிய மன உறுதி இல்லாமல் போகிறது என்கிறார் இவர்.

நமது 10 உச்சகட்ட வருத்தங்கள்:

1.       போதுமான அளவு பிரயாணம் செய்ய முடியாமை
2.       நண்பர்களுடன் தொடர்பு விட்டுப் போவது
3.       போதுமான உடற்பயிற்சி செய்யாமை
4.       அதிகப் பணம் சேர்த்து வைக்க முடியாமை
5.       புகை பிடிப்பது
6.       பள்ளிப் பருவத்தில் சோம்பித் திரிந்தது
7.       வேலை தேர்வு
8.       சரியான துணை அமையாமை
9.       ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம்
10.   நமது தாத்தா, பாட்டிகளின் வாழ்க்கை பற்றி அவர்கள் இருக்கும்போது கேட்டு அறியாமை.

என்ன தோழர்களே உங்கள் வருத்தங்களையும் பட்டியலிடுங்களேன்!


15 comments:

உங்கள் பதிவு அருமை.இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை இது கவலைப்படுவதினால் சரியாகிவிடுமா

எப்படியெல்லாம் சர்வே எடுக்கிறார்கள் ரஞ்சனி.! ஆனால் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு 75% நாம் தான் காரணம். அதை யார் மேல் போடலாம் என்று தேடுவதில் மிச்ச நாட்களை,வருடங்களைச் செலவழிக்கிறோம் என்று நினைக்கிறேன்.
என் சூப்பர் வருத்தம் நான் தேகப் பயிற்சி நினைத்த அளவிற்குச் செய்ய முடியவில்லை என்பதுதான்:) அதற்கும் நானே காரணம்.நன்றி மா. நல்லதொரு பதிவு.

நல்லதொரு ஆய்வைப் சிறப்பாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
பலருக்கும் பயனுள்ளது

நல்ல பகிர்வு

பகிர்வு ரொம்ப நல்லா இருக்கு.

தொழிற் களம் குழுவினருக்கு நன்றி!

எனக்கு இந்தியாவை விட்டு வெளியே போனதே இல்லையே என்கிற வருத்தம் தான் வல்லி!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

வாருங்கள் டாக்டர் ஐயா! கருத்துரைக்கு நன்றி!

நன்றி தமிழ்ச்செல்வி!

நன்றி லக்ஷ்மி அம்மா!

ரஞ்சனி மேடம் உங்களுக்கும் நான் லஷ்மி அம்மாவா?:))))))))
என்னால உங்க வலைப்பூ பக்கம் வந்து பின்னூட்டம் போடவே முடியல்லியே?

அச்சச்சோ! இனிமே அப்படி அழைக்க மாட்டேன். சரியா? உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது பின்னூட்டத்தில் எல்லோரும் உங்களை அப்படி குறிப்பிடுவதால் (கிட்டத்தட்ட மேடம் என்ற அர்த்தத்தில்!) நானும் அப்படியே போட்டு விட்டேன்.
மேடம் என்கிற வார்த்தை எனக்கு கொஞ்சம் அலர்ஜி! என்னை ரஞ்சனி என்றே கூப்பிடுங்கள். நானும் இனி அன்பு லக்ஷ்மி என்று விளிக்கிறேன். டீல் சரியா?

இதோ எனது ப்ளாக்ஸ்பாட் இணைப்பு:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

வருத்தம் மறந்து மகிழ்ச்சியை பட்டியலிட்டால் வருத்தம் மறைந்து போகுமே !

நடுவுல கொஞ்சம் நம்பரக் காணோம்! அதுவும் காப்பி பண்ணி கமெண்ட் பாக்ஸ் ல பேஸ்ட் பண்ணதும் "நம்பர்" தெரியுது!

என்ன கொடும இது!

உதாரணத்துக்கு,

//இந்த ஆய்வில் சுமார் 2000 நபர்கள் கலந்து கொண்டனர்//

இதுல பதிவுல எனக்கு 2000 தெரியல, ஆனா இப்போ பேஸ்ட் பண்ணேன் இங்க, தெரியுது!!!!!??!!!

இது எப்டி?

இது தான் இந்தப் பதிவப் படிக்கும் போது எனக்கு ஒரே வருத்தம் :) :)

எப்டிமா இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கெடைக்குது உங்களுக்கு?
ரொம்பப் படிக்கிறிங்க நீங்க... :)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More