எந்தப் பரப்பையும் தொடு திரையாக்கும் மாயக் கை!

 The Magic Finger proof-of-concept prototype
 
வழக்கமாக கணினி மற்றும் கைப் பேசியின் தொடு திரை ஒரு நிலையான திரைப் பரப்பின் மீது அமைக்கப் பட்டு உபயோகப் படுத்தப்  படுகிறது. ஆனால் இப்போது தோல் , காகிதம் , மேசை  , பிளாஸ்டிக் என்று எந்தப் பரப்பையும் தொடு திரையாக(tocuh screen) உபயோகப் படுத்தும் மாயக் கை(magic finger) என்ற விரல் முனையில் அணிந்து கொள்ளும் கருவியை ஆல்பர்டோ பல்கலையின் ஆட்டோ டெஸ்க் ஆய்வு மையமும் டொராண்டோ பல்கலையும் இணைந்து தயாரித்துள்ளன.
மோதிர வளையம் போன்ற வெல்க்ரோ வளையம் மூலமாக இந்த கருவியை விரல் முனையில் பொருத்திக் கொள்ளலாம். இதில் நுண் காமெராவும் , ஒளி எலி தொடு உணர்வியும் ஒரு எல் ஈ டீ விளக்கும்(LED) பொருத்தப் பட்டுள்ளன. இந்த உணர்வி தோல் , காகிதம் , மேசை என்று தனித் தனியாக அது எந்தப் பரப்பு என்று உணரக் கூடியது
Magic Finger's sensors 

நீங்கள் வேலைக்கு ரயில்  பெட்டி , பேருந்து அல்லது காரில் பயணம் செய்யும் போது செய்தித் தாளில் வந்துள்ள விளம்பரத்தை பிறகு படிக்க அந்த விளம்பரத்தை இந்த மாயக் கையால் தொட்டு நீங்கள் அணிந்து இருக்கும் சட்டையில்  வேண்டிய இடத்தில் அதை தொட்டு பதிவு செய்து கொள்ளலாம். பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சட்டையில் பதிவு செய்த இடத்தைத் தொட்டு எடுத்து வேறு ஒரு பரப்பின் மீது அதை மீண்டும் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் ஒரு நிகழ்வில் பேசிக் கொண்டு இருக்கும் போது உங்கள் பையில் உள்ள கைப் பேசிக்கு அழைப்பு வந்தால் அந்தப் பைய இநத மாயக் கையால் தொட்டு ஒலி எழுப்பாமல் அணைத்து விடலாம் 

மொத்தத்தில் நம்பிக்கை தரும் மாயக் கை!

2 comments:

உண்மையில் மாயக் கைதான்.

நன்றி மதுரகவி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More