டோர் டெலிவெரி-க்கு தமிழில் ஒரு நல்ல பெயர் சொல்லுங்கள் தோழர்களே !!


       பொதுவாக நிறைய தமிழ்சொற்களை நாம் வாசித்து பயன்படுத்தி வந்தாலும், சில ஆங்கிலச்சொற்களின் அல்லது பிற மொழி சொற்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட இந்த காலத்தில் நல்ல தமிழ் சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பு செய்து தான் பயன்படுத்தி வருகிற்றோம்.

சில சமயங்களில் ஒரு சில சொற்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தோமேயானால் சரியான வார்த்தை அமையாமல் திண்டாட வேண்டி இருக்கிறது.

இணையத்தில் நம் நண்பர்கள் இருக்கும் போது இந்த சிக்கலை எளிதாக சமாளிக்கலாம் அல்லவா?

சரி விசயத்திற்கு வருவோம்.

        நம் வணிக நண்பர்கள் அனைவருக்கும் மட்டும் இன்றி பொதுவாகவே சில சொற்களுக்கு நாம் மொழிபெயர்ப்பது என்பது சிரமான காரியம். ஆனால் நாளடைவில் அந்த சொல்லே மிக எளிதாக மாறிவிடும்.

உதாரணம் :

பின்னூட்டம், கடவுச்சொல், சொடுக்கு போன்ற வார்த்தைகள் அன்றாட பயன்பாட்டில் அதிகமாக பயன்படுத்தும் பொழுது அது நமக்கு அன்னியப்படுவதில்லை(?)

அந்த வகையில் சில சொற்களுக்கு தமிழ் பெயர் தேவைப்படுகிறது.
      டோர் டெலிவரி ( Door Delivery )  என்ற சொல்லின் பொருள் வரும்படி எளிய தமிழ் சொல் தேவைப்படுகிறது.

அதே போல் பில் ( Bill ) என்ற சொல்லிற்கும் தமிழ் பெயர் தேவைப்படுகிறது.

உங்கள் யோசனையில் உதிக்கும் தமிழ் சொற்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் தோழர்களே!!

நன்றி!!

11 comments:

door delivery - வாசல் விநியோகம் :) :D

எப்டி?

பில் - விலை ரசீது? இது நீங்க ஏற்கனவே நீங்க பயன்படுத்தறீங்களே?

ம்ம்ம்/. நன்றி கண்மணி முயற்சிக்கு,, வாசல் விநியோகம்

இன்னும் புதிய சொல் ஏதும் வேண்டும்.. நண்பர்களிடம் பகிருங்கள்.

bill = சீட்டு, விலை சீட்டு.

door delivery:வாசல் சேர்ப்பு, வாசல் வழங்கல்.

rekha raghavan.

@Raghavan Kalyanaraman says:///

முயற்சிக்கு நன்றி உறவே!! தங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.

Door Delivery - நேரடி விநியோகம்.
Bill - ரொக்க பட்டியல்.


வாசலில் வழங்குதல்
வாசலில் கொடுத்த‌ல்
வாசலில் ப‌ரிமாறுதல்
வாசலில் விநியோகம்

இல்லத்தில் வழங்குதல்
இல்லத்தில் கொடுத்த‌ல்
இல்லத்தில் ப‌ரிமாறுதல்
இல்லத்தில் விநியோகம்

நேரடி வீட்டுச் சேவை?

---
என் நண்பர்கள் சொன்னது!

(வீட்டு) வாசல் ஒப்படைப்பு / வாசல் சேர்ப்பு

வாயில் சேர்ப்பு / வாயில் ஒப்படைப்பு என்று கூட சொல்லலாம்

விலை சீட்டு

bill translate from edappu chettu

இடரப்பு சீட்டு min bill

பில் ( Bill ) என்ற சொல்லிற்கு இடரப்பு சீட்டு

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More