தெரிந்து கொள்ளுங்கள் பகுதி - 4 
கடந்த பகுதிகளில் சில பொது அறிவு தகவல்கள் பார்த்தோம் . இந்த பகுதியில் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம் . இதில் உள்ள தகவல்கள் உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்த படித்த தகவல்களை இங்கே பதிகிறேன் .
கடந்த பகுதிகளை பார்க்க :
 

தெரிந்து கொள்ளுங்கள் - பகுதி 1

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 2

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி -3

 

 யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.


கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.


1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.


ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.


ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400
மணிநேரம்பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.


தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.


காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.


விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.


சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.


நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.


எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
 

டிஸ்கி  : இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சொல்லுங்கள் தொடர்கிறேன் .


 அன்புடன் : ராஜபாட்டை ராஜா

1 comments:

அறியத் தகவல்கள் !

இளைஞர்களுக்கு பொது அறிவுத்திறனை வளர்ப்பதற்கு நிச்சயமாக உதவும்

தொடர வாழ்த்துகள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More