தலை, தளபதி மற்றும் புத்தர்
மங்கோலிய நாட்டின் கதை ஒன்று:

                நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும், நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலத்தில் பாம்புகள் ஏதேனும் ஒரு புற்றில் ஓளிந்து கொள்ள நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நொழைய நினைக்கும் போதே இன்னொறு தலை இன்னொறு புற்றை பார்க்கும், இன்னொறு தலை உடலௌ இழுக்கும். ஆனால் பல வால்கள் கொண்ட பாம்போ ஒரு புற்றுக்குள் நுழையும். வால்கள் “சரசர”வென உள்ளே போகும்.

நீதி: ஒருமித்த முடிவு “தலை”களுக்குள் இல்லையேல் தகராறு தான்.


புதிதாக வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரரிடம், தளபதி , ஒரு தீக்குச்சியையும் பாறங்கல் ஓன்றையும் தந்து ,” இனி இவர்றின் இயல்பே உன் இயல்பு” என்றார். ராணுவ வீரர்க்கு புரியவில்லை, அவர் தயங்கி நிற்பதை பார்த்த தளபதி சொன்னார், “ உன் இலக்கை அடைய கலத்தில் இறங்கும் போதுனெருப்பு போல பரபரவென்று ப்ற்றி பரவிடு. இலட்சியத்தை அடைய வெண்டும் என்கிற உறுதியில் பாறைபோல், மலைபோல் இரு” என்றார் தளபதி.

நீதி : உறுதியான இலட்சியம்  ஜெய்பது நிச்சயம்


அணிந்திருந்த ஆடை பெருமளவு கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடர். புத்தருக்கு அவர் அளித்த அறிக்கை : “புத்தாடை அணிந்தேன், பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டேன், பழைய விரிப்பை ஜன்னல் திரைசீலையாக்கினேன், பழைய தீரைசிலயை கிழித்து பாத்திரம் துடைக்கிறேன், பழைய பாத்திரம் துடைத்த துணியை கிழித்து விளக்கு திரியாக பயன் படுத்துகிறேன்.”

நீதி : எதையும் விரயம் செய்யாத விவேகமே துறவு


டிஸ்கி : நமது நம்பிக்கை என்ற புத்தகத்தில் படித்தது


2 comments:

தகவல்கள் ஒவ்வொன்றுமே அருமை ஒரு லட்சியத்தை அடைய வேண்டுமென்பதில் அதையையே மனதில் முழுஉறுதியாக கொள்ளவேண்டும்

அருமையான நீதிக் கதைகள்! பகிர்வுக்கு நன்றி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More