Latest News

தங்கம்,வெள்ளி நகை வாங்க போறிங்களா? இதை படிங்க முதலில்


    தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து விண்ணைத் தொட்டாலும் நகைக்கடைகளில் தங்கம் வாங்கும் பெண்களின் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை
                             அப்படி தங்கம், வெள்ளி வாங்கும் போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

தங்கம் வாங்கும் போது பார்க்க வேண்டியவை
v  நகை வாங்கும் பொழுது எப்போதுமே அதன் நிறத்தையும், பளிச்சென்ற தன்மையையும் பார்த்து வாங்கக்கூடாது. ஏனென்றால் ‘பாலிஷ்’ மூலம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.
v  வேலைபாடுகள் குறைந்த நகைகளை வாங்குவதே சிறந்தது. செய்கூலி குறைவு என்பதை விட விற்கும் போது அதிக கழிவு ஏற்படாது.
v  தங்க நகை வாங்கும் போது பலர் பில் வாங்குவதில்லை. தேவையில்லாமல் எதற்கு பில் போட்டு விற்பனை வரி செலுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். நகைகள் சரியில்லாமல் போனாலோ, பிற்காலத்தில் விற்க வேண்டும் என்றாலோ, பில்லால் பெரும் பலம் ஏற்படும். பில் வாங்கும் போது நகையின் எடை,மாடல், மாற்று போன்றவற்றைத் தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும்.
v  கற்கள், முத்துக்கள் பதித்த நகைகள் வாங்கும் போது, அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடை போல் பாவித்து விடுவார்கள். கற்களுக்கு தனி எடையையும், தங்கத்துக்குத் தனி எடையையும் காட்ட வேண்டும்.
v  பழக்கமுள்ள கடைகளிலேயே தங்கம் வாங்குவது சிறந்தது.அதனால் ஏமாற்றம் தவிர்க்கப்படும். பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே பரிகாரம் காணவும் முடியும்.
நகைகளை பாதுகாக்கும் முறை

  • v   தங்க நகைகளை தனித்தனி பெட்டிகளில் வைக்க வேண்டும்.ஒன்றாக பலவற்றை சேர்த்து வைத்தால் கீறல் ஏற்படும்.அதனால் மாற்று குறையும். கலரும் மங்கும்.
  • v  சோப்பு சேர்த்த இளம் சுடுநீரில் நகைகளை முக்கி அரைமணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.சிறிதளவு பற்பசை அல்லது பற்பொடியை பழைய பிரஷில் வைத்து நகைகளை சுத்தம் செய்யலாம்.
  • v  நகையில் அதிக அழுக்கு படிந்திருந்தால், சோப்புக் கலவையில் போட்டு நகையை கொதிக்க வைத்து, பின்பு ‘டூத் பிரஷ்’ மூலம் தேய்த்து கழுவ வேண்டும்.கற்கள் பதித்த நகையை சுடுநீரில் போடக்கூடாது. போட்டால் கற்களுக்கு சேதம் ஏற்படும்.அதன் கவர்ச்சியும் நீங்கி விடும்.
  • v  பவளம், முத்து நகைகளின் மேல் ஒரு வகை ‘கோட்டிங்’ காணப்படும். சூடானால் அந்த கோட்டிங் சிதைந்து விடும். காஸ்டிக் சோடா அல்லது உயர்ந்த வகை ஷாம்புவை பயன்படுத்தி கற்கள் பதித்த நகைகளை சுத்தப்படுத்தலாம்.
  • v  கற்கள் பதித்த நகையை மிக கவனமாக கையாள வேண்டும். கல் பதிந்த நகை அணியும் போது மெத்தையில் அல்லது மிருதுவான விரிப்பின் மீது இருந்து அணிவது நல்லது. ஏனென்றால் அணியும் போது கீழே விழுந்தால் கற்கள் உடைந்து விடும்.
  • v  சோப்புப் பொடியும் மஞ்சள் பொடியும் கலந்த நீரில் ஆபரணங்களைப் போட்டு 5 நிமிடம் சூடாக்கி, பின்பு கழுவினால் நகை பளிச் என ஆகும். கல் பதிந்த நகைகளை சுடு நீரில் போட்டுவிடக் கூடாது.
  • v  வைரம் பதித்த நகைகளை டூத் பேஸ்ட் மற்றும் மிருதுவான பிரஸ் கொண்டு சுத்தம் செய்யவும்.
  • v  முத்து, வைடூரிய நகைகள் மென்மையானவை. அவற்றை கவனமாக சுத்தப்படுத்தவும்.அவற்றை பிளாஸ்டிக் கவரில் வைக்கக் கூடாது. வெல்வெட் அல்லது துணியில் பொதிந்து வைக்கவேண்டும்.வியர்வை,சென்ட் போன்றவை அதன் மேல் படுவது நல்லதில்லை.ஆதலால் விசேஷ நாட்களில் மட்டும் இதை அணியுங்கள்.
  • v  கல் நகைகளை அதற்குரிய பெட்டிகளில் தனித்தனியே வைக்க வேண்டும்.
வெள்ளி வாங்கும் போது பார்க்க வேண்டியவை
                         தங்க நகைளின் அளவுக்கு இப்போது வெள்ளி நகைகளும் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது. முன்பு அரைஞான், கொலுசு, கால் தண்டை, மெட்டி முதலியவை வெள்ளியில் வந்தன. இப்போது காதணி, கழுத்து நகை, வளையல், மோதிரம் முதலியவையும் வெள்ளியில் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.
           கொலுசுகள் கை தொழிலாகவும், மெஷின்கள் மூலமாகவும் தயாராகின்றன. இதில் கையால் தயாரிப்பதை விட மெஷின் தயாரிப்புகளுக்கு ஆயுள் குறைவு. ஆதலால் கையால் தயாரிக்கப்படும் கொலுசையே வாங்க வேண்டும். பொதுவாக 100 கிராமுக்கு மேல் கொலுசின் எடை இருக்கக்கூடாது.
         வெள்ளியில் முதல் தரம், இரண்டாம் தரம் என்று இரு பிரிவு இருக்கிறது.இந்த தரங்களின் வித்தியாசத்தை பொது மக்களால் உணர முடியாது. ஆனால் பழக்கமுள்ள கடைகளில் கேட்டு வாங்கலாம்.நல்ல வெள்ளி அதிக பிரகாசமாக இருக்கும். சில கடைகளில் பழைய வெள்ளியை வாங்கி அதனுடன் புதிய வெள்ளியை உருக்கிக் கலப்பார்கள். இதுவே இரண்டாம் தர வெள்ளியாகும்.
          சில பெண்களுக்கு வெள்ளி கறுத்துவிடும். உடலின் உஷ்ண நிலையால் தான் விரைவில் கறுக்கிறது.அதற்கு வெள்ளியை சூடாக்கினால் கறுப்பு நிறம் மாறிவிடும்.

Follow by Email

Recent Post