குடியரசு தினம் ..வந்தேமாதரம் என்போம்
எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்
வந்தேமாதரம் என்போம்..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே
நம் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே....

குடியரசு என்பதற்கு குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26

கொடி வணக்கமது செய்வோம்-நாட்டின்
குறைகள் நீங்கியினி உய்வோம்
முடி வணங்கிஅதைப் போற்றி-அதன்
மூன்று நிறக்குறிகள் சாற்றி. (கொடி)
 
புதுமையான கொடி பாரீர்-வேறு
பூத லத்திலிலை தேரீர்
முதுமையா யெவர்க்கும் பொதுவாம்-வாழ்வின்
முறையைக் காட்டுவது இதுவாம். (கொடி)
 
துறவின் வர்ணமந்தக் காவி-உலகின் 
துக்கப் பூட்டினுக்குச் சாவி
சிறையும் வீடுமதற் கொன்றே-என்னும்
சேதி ஓதுவதற் கென்றேதுய்ய வெள்ளை நிறக் காட்சி-உண்மை
துலங்கு மென்பதற்குச் சாட்சி
மையமாக நிற்கும் மர்மம்-சத்யம்
மதங்கள் யாவினுக்கும் தர்மம்.  (கொடி)


பச்சையான ஒரு தோற்றம்-நமக்குப்
பக்தி வேண்டுமெனச் சாற்றும்
இச்சையான பொருள் கூடப்-பக்தி
இருக்க வேணுமதை நாட.  (கொடி)


எங்கள் பாரத தேசம் என்று பேர் சொல்லுவோம்” . “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”

2 comments:

அம்பாளடியாள்January 27, 2013 at 12:21 AM
வாழ்த்துக்கள் !....

இனிய நன்றிகள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More