உயிர் காக்கும் ‘முதலுதவி’

          
                                                        எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் போது உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு இறக்கு போன்ற அசம்பாவிதம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. விபத்து ஏற்பட்ட குறிப்பிட்ட காலத்துக்குள் நாம் செய்யும் சிறிய உதவி ,அந்த நபரின் உயிர் காக்கும் பேருதவியாக அமையும்.அது அவரை மட்டும் இன்றி அவரது குடும்பத்தையும் காப்பாற்றும்.

முதலுதவி

       சாலையில் நடந்து செல்லும் போதுவாகனத்தில் மோதுதல், திடீரென மயக்கம் அடைதல் அல்லது வீட்டிற்குள்ளேயே சுயநினைவு இழத்தல்,மின்சார தாக்குதல் என விபத்து ஏற்படுகிறது. அதுபோன்ற சூழலில் அருகில் இருப்பவர்கள் துவக்கநிலை பரிசோதனை,மருத்துவ உதவி அளிப்பதே முதலுதவி. அதேவேளை,அவ்வாறான முறையில் அளிக்கக்கூடிய முதலுதவி,பாதிக்கப்பட்ட நபரை ஆபத்தான நிலைக்கும் கொண்டு செல்லும்.
     
           விபத்து ஏற்பட்டவுடன் பரிசோதிக்க வேண்டியது,சுவாசம், ரத்த  ஓட்டம், சுயநினைவு.                         

முதலுதவியின் போது செய்ய வேண்டியவை.

Ø  சிராய்ப்பு,வெட்டுக்காயம் பட்ட இடத்தில் சோப்பு அல்லது டெட்டால் கலந்த நீரால் சுத்தப்படுத்த வேண்டும்.
Ø  தசைப்பிடிப்பு, எலும்பு விலகிய அல்லது உடைந்ததற்கான அறிகுறி தென்பட்டால் அடிபட்ட இடத்தை உயர்த்தி வைக்க வேண்டும்.
Ø  தோள்பட்டையில் அடிபட்டிருந்தால் அசைக்க முடியாதவாறு கட்ட வேண்டும்.
Ø  மூக்கில் ரத்தம் வடிந்தால்,பாதிக்கப்பட்ட நபரை கீழே அமர்த்தி தலையை முன்புறமாக சாய்த்து வைக்கவும்.அப்போது, பேசவோ,எச்சில் விழுங்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
Ø  மூன்று நிமிடங்களுக்குள் சுயநினைவு திரும்பாவிட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

 மின்சார தாக்குதல்,தீ விபத்தின் போது,

Ø  தீப்பட்ட இடத்தில் ஆடை ஒட்டாமல் உடனடியாக அகற்றவும்
Ø  குளிர்ந்த நீரை தீப்பட்ட இடத்தில் ஊற்ற வேண்டும்.

மயக்கம், நெஞ்சுவலிக்கு

Ø  மயக்கமடையும் நபரை சமமான தளத்தில் படுக்க வைக்க வேண்டும்;ஆடைகளை தளர்த்தலாம்.
Ø  கன்னத்தை லேசாக தட்டலாம்; கால்களை உயர்த்தி வைக்கலாம்.
Ø  நோயாளியை இருதய நோய்க்கு மருந்து எடுக்கிறாரா என        விசாரிக்கலாம்.
 

பாம்புக்கடி,விஷக்கடிக்கு

 Ø  பாம்பு கடித்த இடத்தை சோப்பு தண்ணிரால் சுத்தப்படுத்தலாம்.
Ø  கடிபட்ட இடத்திற்கு மேலும், கீழும் இருக்கக் கட்டி விஷம் பரவாமல் தடுக்கலாம்.
Ø  மலையேறும் போதும், முகாமிற்கு செல்லும் போதும் பாம்புக்கடி முதலுதவி பெட்டியை எடுத்துச் செல்லலாம்.

பாம்பு கடித்த இடத்தில் கீறிவிடுவதோ,விஷத்தை உறிஞ்சி எடுக்கவோ முயற்சிக்க கூடாது; உறிஞ்சி எடுப்பவரின் வாயில் புண் இருந்தால் அதன் மூலம் விஷத்தன்மை உடலில் பரவலாம்.
                       இது போல் நாம் செய்யும் சின்னச் சின்ன உதவியும் ஒரு உயிரையே காப்பாற்றும் பேருதவியாக அமையும் என்பதை நாம் மறக்க வேண்டாம்.
    ‘முதலுதவி செய்வோம் இன்னுயிர் காப்போம்!’
   

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More