Latest News

டெங்குவை விரட்டும் மருந்து கிடைச்சாச்சு!


                                  
                

  டெங்கு காய்ச்சல்’...! நாம் எளிதில் மறந்திருக்க மாட்டோம். ஏனென்றால் நம் மாநிலத்தில் தான் அதன் தாக்கம் மிக அதிகம். பொதுவாக டெங்கு காய்ச்சல்’ கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன்,உடலில் உள்ள ரத்தத் தட்டுக்களின் அளவு குறைவதுடன், தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சில சமயம் நோயின் தீவிரத்தால் மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்நோய்க்கு இதுவரை எந்தவொரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
       பப்பாளி இலைகள், இதற்கு தீர்வாக அமைகிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.சமீபத்தில் தான் அதுவும் அரசின் அறிவிப்பால் தான் தெரியவந்துள்ளது. பப்பாளி இலையின் சாறு உடலில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பப்பாளி இலையின் சாறு கொடுத்து சோதனை நடத்தியதில் டெங்குக்காய்ச்சலை சரிசெய்து விட்டது.
       எப்படியெனில், பப்பாளி இலையின் சாற்றை பருகினால் காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்துக்குள் போதிய அளவு அதிகரித்தள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி கல்லீரல் நன்கு செயல் படும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
      பப்பாளியின் இலையில் ஆண்டி மலேரியல் மற்றும் ஆண்டி கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் சாப்பிட்டால் உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது. மேலும் இந்த பப்பாளியின் இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து,எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
     இந்த டெங்குவுக்கு சரியான மருந்தோ,தடுப்பூசியோ கிடையாது என்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இயற்கை நமக்கு ஒரு அரிய பொருளை வழங்கியிருக்கிறது.டெங்குவை குணப்படுத்தும் அதிசயப்பொருள் இது. நம் வீட்டிலேயே இதை தயாரிக்கலாம் என்பது தான் கூடுதல் சிறப்பு.
      பப்பாளி இலை சாற்றில் உள்ள என்சைம்கள் டெங்குவை உருவாக்கும் வைரஸ்களை மட்டும் அல்லாது வேறு பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து போரிடும் தன்மை கொண்டவை. பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம் பல நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள் என்று மருத்துவர்களும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள். இதில் நிறைந்திருக்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்களால் அது உடல் நலத்திற்கு இன்றியமையாத ஒரு பழமாக உள்ளது.
      புதிதாக பறிக்கப்பட்ட பப்பாளி இலையின் சாற்றில் உள்ள கைமோபாப்பின் மற்றும் பாப்பின் ஆகிய இரு என்சைம்கள் தான் இரத்தத்தில் பிளேட்லட் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
      ஆதலால் பப்பாளியையும்,அதன் இலையையும், நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வோம்!
        டெங்கு என்னும் கொடிய நோயை வரும்முன் காப்போம்!
"பப்பாளின் மகத்துவத்தால் நாமும் பயன் பெறுவோம், இதை பற்றி போதிய விழுப்புணர்ச்சியால் பிறரையும் பயன் பெறச்செய்வோம்!"

Follow by Email

Recent Post