தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!



       தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! 

       
          தண்ணீர் என்றவுடன், நாட்டின் நதி நீர் பிரச்சனை-னு நினைச்சறாதீங்க, இது நாம் குடி நீர் முறையா குடிக்கலீனா வரும் குடிநீர் பிரச்சனை. மாறிவரும் உலகத்தில், கிடைத்ததையெல்லாம் வாய்க்குள் திணித்து வருவதால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருகிறோம். மருத்துவமனையில் காணப்படும் அளவுக்கு அதிகமான கூட்டமே இதற்கு சாட்சி. மருத்துவ வசதிகள் பல இருந்தும், பல உபாதைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பர். ஆனால் இயற்கையில் கிடைக்கும் நீரைக்கொண்டு பல நோய்களை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
      அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, மாக்சா என்ற ஜப்பானிய சூடு பயிற்சி முறை ஆகிய முறைகளால் கூட குணப்படுத்த முடியாத  எல்லாவிதமான நோய்களையும் குடி தண்ணீரால் குணப்படுத்தலாம் என்று ஜப்பான் உடல் நலிவு கழகம் கூறியுள்ளது. அதற்கு, அவர்கள் கூறியுள்ள சிகிச்சை முறையே தண்ணீர் சிகிச்சை. தண்ணீர் சிகிச்சை என்றதும், என்னவோ என்று பயந்து விடாதீர்கள். நாம் தினமும் குடிக்கும் நல்ல தண்ணீர் மட்டுமே இந்த சிகிச்சைக்கு போதுமானது. அதை எப்போது, எவ்வாறு, எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதே தண்ணீர் சிகிச்சை.
      காலை எழுந்தவுடன் காலை கடன்களை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன் சரியாக ஒன்றறை லிட்டர் நீர் அருந்த வேண்டும். ஆரம்ப காலங்களில் முதலில் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவும் குடித்துவிட்டு சிறிது நேரம் நடந்துவிட்டு வந்து மீதம் உள்ள நீரை குடிக்க பழகிக்கொள்ள வேண்டும். கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது தண்ணீரை குடிப்பதற்கு முன் ஒன்றறை மணி நேரமும், குடித்த பின் ஒன்றறை மணி நேரமும் காபி, தேநீர் உட்பட எவ்வித பானங்களையோ, நொறுக்குத் தீனியோ சாப்பிட்டு இருக்கக்கூடாது.
தண்ணீர் சிகிச்சை மூலம் குணமடையும் நோய்கள்
     மூட்டுவாதம், வாயுப் பிடிப்பு , கீழ் வாதம், பொதுவான பக்கவாதம், ஊளைசதை, மூட்டுவலி, காதில் இரைச்சல்,மிகையான இருதயத்துடிப்பு, மயக்கம், தலைவலி, ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் சம்மந்தமான நோய்கள், முறையற்ற மாதவிடாய், கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், தொண்டை சம்மந்தமான நோய்கள், இருமல், ஆஸ்துமா, சளி, மூளைக்காய்ச்சல், கல்லீரல் சம்மந்தமான நோய்கள், சிறுநீரக குழாய் சம்மந்தமான நோய்கள், பித்தக் கோளாறுகள், வாய்வு கோளாறுகள், வயிற்றுப்பொருமல், மூலம், மலச்சிக்கல், உதிரப்போக்கு.

1 comments:

அற்புதமான தகவல் மகேஸ்வரி. நான் அனுபவித்துகொண்டிருகிரேன் இதனை பல ஆண்டுகளாக... தண்ணீர் தண்ணீர்தான்... இதை போன்ற நல்ல தகவல்களை தாருங்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More