உங்கள் வீட்டின் அருகில் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்களா?

                                  
  
                  உங்கள் வீட்டின் அருகில் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்களா?அவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மட்டும் அல்ல சில தனியார் தொண்டு நிறுவனங்களும், போதிய பயிற்சி மற்றும் வேளை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றன.கோவை தடாகம் ரோட்டில் உள்ள ‘யூடிஸ்பாரம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சியை வழங்கி வருகிறது.
       இந்த அமைப்பு,தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை கண்டறிந்து, அப்பணியில் சேர, செவித்திறன் குறை உடையோர்,பார்வையற்றோர், கை கால் இழந்தோர் உட்பட மாற்றுத் திறனாளிகளுக்கு, கம்ப்யூட்டர், சைகை மொழி பெயர்ப்பாளர்,பைண்டிங் செய்தல்,பிரெய்லி தட்டச்சு கணிகத்தை விரைவாகப் பயில அபாகஸ் பயிற்சி உட்பட பயிற்சிகளை வழங்கி வருகிறது.
      தவிர மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பேப்பர் கவர், வாழ்த்து அட்டை தயாரித்தல், உட்பட பல்வேறு பயிற்சிகளை கனுவாயில் உள்ள சிறப்புக் குழந்தைகள், பயிற்சி கூடத்தில் இலவசமாக அளித்துவருகிறது. பயிற்சியில் சேர வயது வரம்பில்லை. பிளஸ் 2 படிக்கும் பார்வையற்ற பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு, அமைப்பு சார்பில், சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது.சிறப்பு மதிப்பெண் எடுக்கும் பெண்களுக்கு, இலவச லேப்டாப்களை வழங்கி வருகிறது.
நிர்வாக அறக்காவலராக உள்ள மணி, பார்வையற்றவருக்கான சர்வதேச கல்வி கழகத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார்.
விபரங்களுக்கு,
     சேகர்,
     அலைபேசி – 9442607572
     என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comments:

நல்லதொரு தகவல்!
அலைபேசி எண் கொடுக்கும்போது +91 என்று போட்டுவிட்டு எண்ணைக் கொடுங்கள் சகோதரி.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்த்துகள்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More