போன்சாய் சார்ஜர் மரம்


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

நாம் வாழும் பூமிப்பந்து கதிரவன் அளித்த கொடை ...


இருட்டிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து
இந்திய மக்களின் "ஒளி புரட்சி'க்கு சூரிய ஒளி வித்திடும் என்ற நம்பிக்கை பிரகாசமாகி வருகிறது ....

இயற்கை ஏராளமாக அளிக்கும் சூரியகனல் சக்தி மின்சக்தியாக மாற்ற கிடைத்த தொழில் நுட்பம் வரப்பிரசாதமாக ஒளிர்கிறது ...


போன்சாய் கலையையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.

 சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர்...
வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும். 

முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் ...

சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம் 

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கும் போன்களில் சூரிய ஒளியைப் பெற்று மின்சக்தியை உருவாக்கும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம், போனில்
உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படும்.
மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 90 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

 வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் வி.எப். 247 என்ற மாடல் பின்புறமாக சோலார் பேனலுடன் வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் வசதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. எப்.எம். ரேடியோ, வண்ணத்திரையும் உள்ளன. மைக்ரோமேக்ஸ் வழங்க இருக்கும் மாடலில் கூடுதல் வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 சிறிய நாடான சூரிய வெப்பம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஜெர்மனியில், சூரிய மின்சக்தி பயன்படுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.  
12 மாதங்களும் சூரிய வெயில் கொண்ட  இந்தியாவில் சூரிய மின்சக்தி மகாமகத்தான வெற்றி பெறும்.என்பதில் ஐயமில்லை ..
 solar charge controller.Emergency LightSolar Rural Home Lighting Systems. Solar home lighting systems 

10 comments:

அருமை,மாற்று எரிசக்தியின் கண்டுபிடிப்பு மகத்தானது.அவசியம் எல்லோரும் பயன்படுத்த வேண்டியது

கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

சூரிய சக்தி கலங்களின் விலை அதிகமாக உள்ளது.
வேறு ஏதாவதொரு பொருளை பயன்படுத்தி மிக குறைந்த விலையில் கலங்களை தயாரிக்கும் தொழில் நுட்பம் குறித்து ஆராய்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும் தற்போது ஒரு circuit மூலம் குறைந்த மின் சக்தியை கொண்டு அதிக அளவில் மின்னோட்டம் உற்பத்தி செய்யும் கருவிகளை பயன்படுத்தி மின்கலங்களை charge செய்யும் தொழில் நுட்பம் ஆராயப்படவேண்டும்.

இன்னும் 220 வோல்ட் மின்சக்தியை பயன்படுத்தி கருவிகளை இயக்கும் அந்த கால வழக்கம் தவிர்க்கப்பட்டு. குறைந்த மின்னோட்டத்தில் இயங்கும் கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஏராளமான மின் சக்தி விரயமாவது தவிக்கலாம்.

இந்த துறையில் ஆராய்சிகள் முடுக்கி விடப்படவேண்டும்.

Pattabi Raman says:/


இன்னும் 220 வோல்ட் மின்சக்தியை பயன்படுத்தி கருவிகளை இயக்கும் அந்த கால வழக்கம் தவிர்க்கப்பட்டு. குறைந்த மின்னோட்டத்தில் இயங்கும் கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஏராளமான மின் சக்தி விரயமாவது தவிக்கலாம்.

இந்த துறையில் ஆராய்சிகள் முடுக்கி விடப்படவேண்டும்.//

விரைவில் மாற்று மின்சக்தி ,புதிய தொழில்நுடபங்கள் வரவேற்கிறோம். தேவைகள் தானே கண்டுபிடுப்புகளின் தாய் !!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான கண்டுபிடிப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவைகள் நடைமுறைபடுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமைப்புக்கள் தேவை. பன்னாட்டு நிறுவனங்களும், அரசு நிருவனங்களும் இதற்க்கு முட்டுக்கட்டைகளாக இருப்பது நம்முடைய துரதிஷ்டம்

Pattabi Raman says: January 9, 2013 11:34 AM Reply
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான கண்டுபிடிப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவைகள் நடைமுறைபடுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமைப்புக்கள் தேவை. பன்னாட்டு நிறுவனங்களும், அரசு நிருவனங்களும் இதற்க்கு முட்டுக்கட்டைகளாக இருப்பது நம்முடைய துரதிஷ்டம்///

ஆதங்கமான பகிர்வுகள் ..விரைவில் விடிவுகாலம் பிறக்கட்டும் ...

விரிவான , விளக்கமான கருத்துரைகளுக்கு மன்ம் நிறைந்த இனிய நன்றிகள்...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
நல்ல பயனுள்ளதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். திரு பட்டாபி ராமனின் கருத்துக்கள் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுகின்றன.எல்லாத் தடைகளும் நீங்கி, ஆதவனின் சக்தியை நாம் பயன்படுத்தும் காலம் விரைவில்
வர வேண்டும்.
உங்கள் இருவருக்கும் நன்றி!

தாவரங்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றன. வளருகின்றன, பொருட்களை உற்பத்தி செய்கின்றன.அந்த தொழில் நுட்பமும் ஆராயப் படவேண்டும்.

2.சிலிகானை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூரிய மின்கலங்கள் விலை அதிகமாக உள்ளது./ அதற்க்கு மாற்று விலை குறைந்த இனங்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

3.என்னுடைய கேள்வி என்னவெனில்.gas lighter மற்றும் mosquito killer bat ல் மூன்று வோல்ட் மின்சாரத்தில் ஒரு circuit மூலம் பல மடங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக battery charger மூலம் மின்னோட்டம் ஏற்ற பல மணி நேரம் ஆகிறது.
அதை தவிர்த்து switchon செய்தவுடன் ஒரே நொடியில் பலமடங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க வழி வகைகள் உண்டா என்பதுதான்.
தகுந்த மின் ஆராய்ச்சியாளர்களிடம் நான் பதிலை எதிர்பார்க்கிறேன்.

Ranjani Narayanan says: January 10, 2013 8:58 AM Reply
அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
நல்ல பயனுள்ளதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். திரு பட்டாபி ராமனின் கருத்துக்கள் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுகின்றன.எல்லாத் தடைகளும் நீங்கி, ஆதவனின் சக்தியை நாம் பயன்படுத்தும் காலம் விரைவில்
வர வேண்டும்.
உங்கள் இருவருக்கும் நன்றி!//

கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

Pattabi Raman says:

தகுந்த மின் ஆராய்ச்சியாளர்களிடம் நான் சிறப்புமிக்க பயனுள்ள நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்புச்சாதனங்களை எதிர்பார்க்கிறேன் ..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More