DYE அடிச்சா DIE ?

                                                       

    
          வயதான பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவருக்கும் இன்று, ‘தலை’யாய பிரச்சனையாக இருப்பது முடி நரைத்தல். இன்று இளநரையின் காரணமாக   இளமையியே முடி நரைப்பதினால், வயதானவரை போல காட்சி அளிக்கின்றனர். அதை மறைப்பதற்கு பெரும்பாலானோர் நாடிச் செல்வது ‘ஹேர் டை’. அதை பயன் படுத்துவதால் என்னென்ன தீங்குகள் நேரிடும் என்பதை பார்ப்போம்.
                                 
   பிரபல புகைப்படக் கரைஞர் சித்ரா சுவாமிநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். அவருடைய இறப்புக்கு முக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது … ஹேர் டை!
   ‘அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளுக்கு முன் அவருடைய உடல் நிலை மோசமானபோது, பரிசோதித்த டாக்டர்கள்… ‘நுரையீரல் பாதிப்படைஞ்சிருக்கு. இதற்கு இத்தனை நாளா இவர் பயன் படுத்திய டை தான் ஒரு முக்கிய காரணம்’, என்று சொன்னார்கள்!’ என்று சோகம் பொங்க சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன்.
   இது குறித்து ‘அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர்கள் கூறுவதாவது
    ‘டை பயன்படுத்துவதால்…அலர்ஜியில் ஆரம்பித்து ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்’ என்ற அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர். டை- ஐ தொடர்ந்து உபயோகிப்பதால், நம் தலைமுடிக்கு மட்டும் வினை புரிவதில்லை, உடலிலும் சென்று ரத்தத்திலும் அது கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பது தான் பிரச்சனையே!’
    டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப் பொருட்கள், நம் ஹார்மோன்களை சரியாக செயல்படவிடாமல் தடுக்கின்றன. அலர்ஜி, எதிர்ப்பு சக்தி குறைதல்,கேன்சர், சிறுநீர்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு அடிக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மீசைக்கு கீழ் இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும்.
    செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.
    டை (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால், ‘கலரிங்’ (colouring) என்ற சொல்லுக்கு தற்போது உலகம் மாறிவிட்டது. இயற்கை முறையில் தயாரிக்கும் ‘ஹென்னா’ என்று சொல்லப்படும் செம்பருத்தி, மருதாணி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டை-யைத் தவிர்த்து வேறு எதைப் பயன்படுத்தினாலும் அது நம் முடிக்கு மட்டுமல்ல, உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நரையை அதன் அழகுடன் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்வோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More