"பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை!"

 நீங்கள் காட்டுப் பாதையில் நடந்திருந்தால் இதை அறிந்திருப்பீர்கள் .  பொதுவாக பூனை ஒரு திறந்தவெளியை கடந்தால், உடனே மறைவில் சற்று நேரம் பதுங்கியிருக்கும்.  எதாவது நடமாட்டம் இருக்கிறதா என்று ஒளிந்திருந்து கூர்மையாக கவனிக்கும். அது அதனுடைய இயற்கை குணம்.

புலி, சிறுத்தை போன்றவை பூனை இனத்தை சேர்ந்தவை.

இன்றைக்கு கூட உங்கள் வாகனம் போகும் பாதையில் ஒரு புலி கடந்தால், அது ஓடி போய்விடாது.  புதரில் மறைந்து உட்கார்ந்திருக்கும். அதன் இறை வருகிறதா அல்லது அதன் பாதுகாப்புக்கு இடையூறாக யாரவது வருகிறார்களா  என்று பார்த்திருக்கும்.

நகரம் உருவாகாத  பழைய காலங்களில் மக்கள் காட்டுப்பாதையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மாட்டு வண்டிகளின் மூலமாகவும் நடந்தும் பயணத்தை அவர்கள் மேற்கொண்டார்கள்.

'
புலி' போன்ற பூனை இன மிருகம் குறுக்கில் கடந்தால், அது புதரில் பதுங்கி இருக்கலாம். உங்களையோ உங்கள் வாகனத்தை இழுக்கும் மிருகத்தையோ குறி வைத்து அது பாயக்கூடும். சற்று நேரம் பொறுத்துப் பயணத்தைத் தொடர்வது நல்லது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

இன்றைய தினத்தில் இது அபத்தமான நம்பிக்கை.

மோட்டார் வாகனங்கள் விரையும் நகரத்தில், பூனை குறுக்கே போனால், அதற்குத்தான் சகுனம் சரியில்லை, எதாவது வண்டியில் அடிபட்டு சாகும்!

நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ் - மூன்றாவது கோணம் புத்தகத்திலிருந்து 
படங்கள்: கூகுள் வலைதளம்.

5 comments:

அறியாமை அகல செய்யும் பதிவு அருமை

மிக மிக சரியாக சொன்னிங்க.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More