இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !!

 இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதை எப்படி பத்திரமாக வைப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் பணம் எடுக்க, வேறு கணக்கிற்கு அனுப்ப வங்கிக்கு போக பலருக்கு நேரமில்லை. அதனால் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கிறார்கள், இன்டர்நெட் பாங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். தற்போது பலர் போன் பாங்கிங் செய்கின்றனர். அதாவது இன்டர்நெட் வசிதியுள்ள செல்போனில் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

இன்டர்நெட் பாங்கிங் , போன் பாங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

1.
யாராவது உங்களுக்கு போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்கள் கேட்கும் தகவலைக் கொடுத்து விடாதீர்கள். மாறாக நீங்களே வங்கிக்கு போன் செய்யுங்கள்

2.
ஒன்றுக்கும் மேற்பட்ட .டி.எம். கார்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் ஒரே பின் நம்பரை வைக்காதீர்கள்.

3.
உங்கள் வங்கிக் கணக்கு பாஸ்வேர்டை கம்ப்யூட்டரில் சேவ் பண்ண வேண்டாம்.

4.
போன் பாங்கிங் செய்பவர்கள் போனுக்கு செக்யூரிட்டி லாக் போடுங்கள்.

5.
வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் பேசும்போது அதை பிறர் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

6.
தேதி அல்லது எண்களை பின் நம்பராக வைக்க வேண்டாம்.

7.
இன்டர்நெட் சென்டருக்கு சென்று ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்தால் அதை யாராவது பார்க்கிறார்களா என்று கவனிக்கவும். பரிவர்த்தனை முடிந்த பிறகு வங்கிக் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம்.


நன்றி : பெரோஸ்
படங்கள் : கூகுள் வலைதளம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More