கீரைகளின் பயன்கள்!!!!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.


நன்றி : இன்று ஒரு தகவல்
படங்கள் : கூகுள் வலைதளம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More