உலகை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதம் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் சூழ்ச்சி !!!!

உலகில் நடக்கும் அனைத்து பயங்கிரவாத செயல்களுக்கும் மொசாத்தின் பங்கு இல்லாமல் இருக்காது இந்திய உளவுத்துறை மூலமாக, தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கு இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ஆயுத சப்ளை செய்கிறதா என்ற கேள்வி, உளவு வட்டாரங்களில் அடிபடுகின்றது.

இந்த ஆயுத சப்ளையில் மொசாத்துக்கு தொடர்பு உள்ளது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்று தெரியவருகிறது. இதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

1980-
களில் இந்திய உளவுத்துறை றோ, விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழ விடுதலை அமைப்புகளுக்கு ஆயுதம வழங்கியிருந்தது. அதன்பின், மியன்மர் நாட்டில் உள்ள இரு போராளி அமைப்புகளுக்கு ஆயுதங்களும், ஆயுதப் பயிற்சியும் வழங்கியதாக தெரிய வந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்புக்கும் இந்திய உளவுத்துறைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உறவுகள் உள்ளன எனவும் கூறப்பட்டது.

இப்போது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், பலுசிஸ்தான் போராளி அமைப்பு ஒன்றுக்கு ரகசியமாக ஆயுதம் சப்ளை செய்யும் விவகாரத்திலேயே இந்திய உளவுத்துறை தொடர்பு பட்டுள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உளவு வட்டாரங்களில் அடிபடும் தகவல்களில் இருந்து, சமீப நாட்களில் பலுசிஸ்தான் போராளி அமைப்பின் கைகளில் திடீரென புதிய ஆயுதங்கள் முளைத்துள்ளன. இவற்றில் சில ஆயுதங்களை வெளி சந்தையில் (ஆயுத பிளாக் மார்க்கெட்) வாங்கும் அளவுக்கு பலுசிஸ்தான் போராளி அமைப்புக்கு செல்வாக்கு கிடையாது.

உதாரணமாக, ரஷ்ய தயாரிப்பு எஸ்..-2 தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள் (SA-2 surface to air missiles) இவர்களது கைகளில் தென்படுவதாக தெரிகிறது. அத்துடன், ஐரோப்பிய சப்-மெஷின் கன்கள், ராக்கெட் லோஞ்சர்கள் ஆகியவையும் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் லேட்டஸ்ட் தொலைதொடர்பு சாதனங்களையும் திடீரென உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆயுதங்களும் சாதனங்களும் நிச்சயமாக, ‘ஏதோ’ வருங்கால திட்டத்துக்காக வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றால் கொடுக்கப்பட்டது என்று அடித்துச் சொல்லலாம். இது ஒன்றும் புதிதல்ல. அநேக வெளிநாட்டு உளவுத்துறைகள் ரகசியமாக செய்யும் காரியம்தான் இது. போராளி அமைப்புகளுக்கு சி.ஐ.ஏ. ரகசியமாக ஆயுதம் கொடுத்த கதையெல்லாம் உண்டு. 1980களில் ஈரானில் இயங்கிய போராளி அமைப்புகளுக்கு சி.ஐ.ஏ. மொசாத் ஊடாக ஆயுதம் வழங்கியது. கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் ஆப்கானில் இயங்கிய போராளி அமைப்புகளுக்கு பாகிஸ்தானிய உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. ஊடாக ஆயுதம் வழங்கியதும் சாட்சாத் சி...தான்.
அதே ஸ்டைலில் பலுசிஸ்தான் போராளி அமைப்பு ஒன்றுக்கு மொசாத்தால் ஆயுதம் வழங்கப்படுகிறது.

பலுசிஸ்தான் போராளி அமைப்புகள் போராடுவது பாகிஸ்தான் மற்றும் ஈரானிய அரசுகளுக்கு எதிராக என்பதே இந்த ஆயுத வழங்கலுக்கு காரணம்!
பலுசிஸ்தான் எங்கிருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு ஒரு வார்த்தை:
மலைப் பிரதேசமான பலுசிஸ்தான், ஈரானின் தென்கிழக்கு பகுதி, பாகிஸ்தானின் மேற்குப் பகுதி, ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம். இந்த மூன்று பகுதிகளையும் இணைத்து தனிநாடு அமைப்பதற்காக போராளிக் குழுக்கள் ஆயுதம் ஏந்தி போராடுகின்றன.
ஜியாகிரஃபிகல் லொகேஷன் காரணமாக, இந்தப் பகுதிக்குள் மொசாத்தின் ஊடுருவல் அதிகம் கிடையாது. ஆனால், இந்திய உளவுத்துறை றோவுக்கு நன்கு பரிச்சயமான ஏரியா இது. அதனால்தான், மொசாத் தமது ஆயுத சப்ளையை றோ ஊடாக செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


நன்றி : இன்று ஒரு தகவல்
படங்கள் : கூகுள் வலைதளம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More