மக்கா பொருளிலும் மகத்தான வருமானம் ஈட்டலாம் (பிளாஸ்டிக் சாலை)   மக்காமல் குப்பையில் கிடந்து சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பைகளை வைத்து வருமானம் தரும் தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்கள் ஊத்துக்குளி மாவட்டம் கணக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்.
       பிளாஸ்டிக் தார்சாலை போடும் அரசு திட்டத்துக்காக பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து அரைத்துக் கொடுத்தால் போதும். இந்த பிளாஸ்டிக் அரைக்கும் மிஷினின் விலை ஒன்றரை லட்ச ரூபாய்.
       ஊராட்சியில் இருந்து சேகரிக்கின்ற மக்காத குப்பைகள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுகின்ற கேரி பேக், பால் கவர், சில ஆட்கள் சேகரிக்கின்ற வேஸ்ட் கவர் என பல இடங்களில் இருந்தும் நமக்கு பிளாஸ்டிக் கவர்கள் கிடைக்கின்றன. ஒரு கிலோ பிளாஸ்டிக் பாலித்தீன் கழிவுகளை 7 ரூபாய்க்கு வாங்கி, அழகாய் கிரைண்டிங் பண்ணி கிலோ 22 ரூபாய்க்கு விற்கலாம்.ஒரு நாளைக்கு இரண்டு பேர் வேலை பார்த்தாலே போதும். ஒரு ஆளுக்கு 150 ரூபாய் சம்பளம் எடுக்கலாம்.அரைக்கும் போது முகத்திற்கு மாஸ்க் போடலை என்றால் அலர்ஜி ஏற்படும்.
      “ ஒரு சாதாரண தார்ச்சாலை 3 வருடம் தாங்கும் என்றால் , இந்த பிளாஸ்டிக் தார்சாலை 10 வருடங்களுக்குத் தாங்கும். சாதாரண மழை பெய்தா கல்லுக்கும் தாருக்கும் நடுவில் தண்ணி இறங்கி ஊறிப்போய் கல் வொளியே வர ஆரம்பிக்கும். இந்த பிளாஸ்டிக் சாலையில் அப்படி நடக்காது. சாலையில் பள்ளம்,விரிசல் விழாமல் ஸ்ட்ராங்காக இருக்கும்.சாதாரண ரோட்டை விட இரண்டரை மடங்கு உறுதி இதுக்கு ஜாஸ்தி ” என்கிறார் பிளாஸ்டிக் சாலையின் நிபுணரும், மதுரை தியாகராஜர் காலேஜ் வேதியல் துறை டீனுமான டாக்டர் ஆர். வாசுதேவன். வீட்டில் இருக்கும் பெண்கள் இத்தொழிலை முயற்சிக்கலாமே! இதனால் தாம் லாபம் ஈட்டுவதுடன்,சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

2 comments:

sir பிளாஸ்டிக் அரவை தொழில் செய்யும் நிறுவனத்தின் போன் நம்பர் ssthiru77@gmail.com அனுப்புங்க சார்

can i get the contact details of the above crushing unit. So that i will get an idea before starting the unit. And also if any crushing unit in vellore i request you to kindly let me give the details
Thank you
Prakash, 9994882906

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More