அறிஞர்களின் பொன்மொழிகள்


அறிஞர்களின் பொன்மொழிகள்

Ø  அற்புதங்களை நடத்திக்காட்டக் கூடிய சக்தி, நம்பிக்கைக்கு உண்டு – தூசிடைடஸ்

Ø  குறிக்கோள் இல்லாதவர்களை விட குறிக்கோள் உள்ளவர்கள் இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார்கள் – யங்

Ø  காணும் கனவை நிஜமாக்கி காட்டுபவர்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை – மெகின்ஸி

Ø  எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர் – சிசரோ

Ø  உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர் – கார்லைல்

Ø  எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும் – மேட்டர்லிங்

Ø  உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்கு செல்வதைப் போன்றது – எமர்சன்

Ø  வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் – மில்டன்

Ø  நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா, அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள் – வோல்ட்டன்

Ø  நிதானமாய் சிந்தித்து உறுதியோடு செயல் படுகிறவர்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை – மகின்டோஷ்

Ø  நாம் நினைத்தால் வளமான வாழ்க்கையை நம்மால் நிச்சயம் உருவாக்கிக் கொள்ள முடியும் – ஜார்ஜ் எலியட்

Ø  நிறைய சவால்களை நம்பிக்கையாய் எதிர்கொண்டு போராடுபவர்கள் நிறைய ஜெயிக்கின்றனர் -  ஆக்டன் ஆர்மா

Ø  நம்பிக்கை மனோபாவத்துடன் என்ன கட்டளையிட்டாலும் அதை ஆழ்மனம் நடத்திக்காட்டும் – வான்ஜி மார்மென்

Ø  நிரந்தர தோல்வி, நிரந்தர துக்கம், நிரந்தர சோகம் என்று எதுவும் கிடையாது – ஒயிட்

Ø  வியக்கத்தக்க அளவிலான ஆற்றல் உங்களுக்குள் மறைந்து கிடக்கிறது – கிளாட்ஸ்டன்

Ø  அரைகுறை மனதுடன் எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம், அர்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள் - செஸில்

Ø  விருப்பத்தோடு செய்கிற வேலையைத் தான் விரைவாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் – ரஹேல்

Ø  உங்களுக்குள் உள்ள ஆற்றலை கூர்மைப்படுத்தினால் தான் உலகையே வெல்ல முடியும் - சிம்மன்ஸ்

Ø  எதுவொன்று இருப்பதைவிட வித்தியாசமாக இருக்கிறதோ அதுவே முதலில் கவனிக்கப்படும் – ஸ்டாடர்

Ø  உண்மையான உழைப்பிற்கு எவருமே முதலிடம் தராமல் இருந்ததில்லை – புளுடார்க்







2 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More