ஹைப்பர்சோனிக் ஏவுகணைஉலகிலேயே ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 


புதுடெல்லியில், உலகிலேயே அதிகம் வேகமுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்தியாவின் பிரம்மோஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 2017ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று பிரம்மோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் முன்னுரிமை அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும். மேலும் வேறு சில நாடுகள் ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ளனர். 


ஆனால் வெளிநாடுகளுக்கு விற்பது பற்றி இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று பிரம்மோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது. இந்திய ராணுவத்தில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேறு சில நாடுகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்த, உலகிலேயே மிக வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அத்துடன் நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளும் உருவாக்க பிரம்மோஸ் திட்டமிட்டுள்ளது.


நன்றி
தினகரன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More