வெயில் கால நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கனுமா?


வெயில் கால நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கனுமா?

குழந்தைகள் பராமறிப்பு.

    குழந்தை என்பது ஒரு அற்புத கலை. குழந்தையின் ஒவ்வொரு 

கட்டத்தையும், அழகாக செதுக்கும் பெற்றோரே, கோடை காலத்தில் 

குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். பொதுவாக வெயில் 

காலத்தில் குழந்தைகளை தட்டம்மை, சின்னம்மை, வயிற்றுப்போக்கு 

அதிகளவு தாக்குகிறது. ஆரோக்கியமான உணவு, சத்தான 

காய்கறிகளை சாப்பிட்டு உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை 

அதிகரித்தாலே போதுமானது. நோய் தாக்காது.
   
   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 வயதுக்கு உட்பட்ட 

குழந்தைகளுக்கு, ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தாலும், கோடை 

காலத்தில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கொதிக்க 

வைத்து சுத்தமாக வடிகட்டிய நீரையே குழந்தைகளுக்கு கொடுக்க 

வேண்டும். திறந்தவெளியில் கிடைக்கும் கலர்புல்லான உணவுகளை 

அறவே தவிர்க்க வேண்டும்.
  
     உடலில் நீரின் அளவு குறையும் போது சிறுநீர் கழித்தலில் 

பிரச்சனை ஏற்படும்;எரிச்சல் தன்மை இருக்கும். எனவே அதிக அளவு 

சீரை குடிக்க கொடுக்க வேண்டும். வெயில் காரணமாக தோலில் சிறு 

வெடிப்பு புண் வருவதை தடுக்க, நல்ல நீரில் அடிக்கடி குளிக்க 

வைக்கலாம்.
   
   துரித வகை உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது, கொலஸ்ட்ரால் 

அதிக அளவில் இருக்கும். ஆசையாக உள்ளதே என அடிக்கடி சாப்பிடும் 

போது உடல் எடையும் வஞ்சனையில்லாமல் அதிகரித்துக்கொண்டே 

செல்லும். ஆதலால் குழந்தைகளை பாஸ்ட்புட் பக்கமே அனுப்பக் 

கூடாது. இவற்றை முறையாக பின் பற்றினாலே, வெயில் காலத்தில் 

குழந்தைகளுக்கு ஏற்படும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More