உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு…?


         உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு…?
      காலை எழுந்தவுடன் நாம் முதலில் தேடுவது டூத் பேஸ்ட்டைத்தான். டூத் பேஸ்ட்களில் பல வகைகள் உள்ளன. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் டூத் பேஸ்டில் என்ன இருக்கு, அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

        உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு…?

          பற்களை பாலிஸ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்கான அப்ரசிவ்ஸ், நுரையை உருவாக்கும் டிடர்ஜன்ட்,பிரஸ்சர்வேட்டிவ், நிறத்தை அளிக்கும் கெமிக்கல்கள் மற்றும் சுவையைக் கூட்டும் பிளேவர்ஸ், நறுமணத்திற்கான பிராக்ரன்ஸ்,கால்சியம், பிராஸ்பரஸ், மெக்னிசியம்,வைட்டமின் டி போன்றவை இவற்றில் உள்ளன.
           ப்ளோரைடு கலந்த பேஸ்ட்டை உபயோகிக்குமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைப்பதை பார்த்திருப்போம். நாம் வசிக்கும் இடம், நாம் அன்றாடம் அருந்தும் நீரிலுள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த பரிந்துரை மாறுபடலாம். இயற்கையாய் கிடைக்கக்கூடிய ப்ளோரைடு, நம் பற்களும் , எரும்புகளும் வலிமையாய் இருக்க உதவுகிறது. ப்ளோரைடு கலந்த  பேஸ்டை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது என்று பல ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையே அளவுக்கு அதிகமாக உபயோகிக்கும் போது பற்களுக்கு ஊறு விளைவிப்பதுடன் உயிரையும் பறிக்கும் அபாயம் உள்ளது.

  குழந்தைகளும் டூத் பேஸ்ட்டும்

         குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு கலந்த பேஸ்ட்டை உபயோகித்தால் பற்களில் திட்டுக்கள், பற்சிதைவு போன்றவை ஏற்படலாம்.அதே போல் ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆதலால் ப்ளோரைடு கலந்த பேஸ்ட்டை முழுங்காமல் துப்பிவிடுவது நல்லது.பேஸட்டை விழுங்கும் குழந்தைகளுக்கு அதில் உள்ள விஷ தன்மையை பற்றி புரிய வைக்க வேண்டும்.ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்துள்ளது. இது பற்களை வழுவாக்கிறது.

வினையாக்கும் வியாபாரம்

    தற்போதுள்ள டூத் பேஸ்ட் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை பெருக்குவதற்காகவும், தொழிலில் லாபம் பார்க்கவும் பல கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுகின்றது. அதிலும் பல வண்ண நிறங்களில் தங்கள் பேஸ்ட்டை அறிமுகப்படுத்துகிறது. ஆனால் கவர்ச்சிகரமான வண்ணங்களைக்காட்டிலும் வெள்ளை நிறத்திலான பேஸ்ட்டே நல்லது. அதே போல் ப்ளோரைடு குறைந்த பேஸ்ட்டையே தேர்வு செய்யுங்கள்.
    பற்கள் சொத்தையாக காரணமாகும் ரசாயனங்கள் அடங்கியுள்ளது தான் அப்ரேஸிங். எனவே இதன் அளவு குறைந்த பேஸ்ட்டையே வாங்கவும். பெராக்ஸைடு, சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா அடங்கிய பேஸ்ட்களையும் தவிருங்கள். ஜெல் பேஸ்ட்கள் பற்களின் தேய்மானத்திற்கு காரணம் என்பதால் ப்ளோரைடு குறைந்த கிரீம் பேஸ்ட்டையே குழந்தைகளுக்கு கொடுங்கள்.

1 comments:

பயனுள்ள தகவல்கள் .
பகிர்விற்கு நன்றி !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More