உங்களுக்கு மூளை இருக்கா?        உங்களுக்கு மூளை இருக்கா?’ என்று யாராவது கேட்டுவிட்டால் போதும், நமக்கு பொத்துக்கொண்டு வரும் கோபம். யோசிக்காமல், ஏதாவது சொயலை செய்துவிட்டாலோ, அல்லது பேசிவிட்டாலோ, இது போன்ற வார்த்தையை பலர் உபயோகிக்க கேட்டிருக்கிறோம்.
        இன்றளவில், பல குழந்தைகள் , தங்கள் அபரிமித மூளையின் செயல் திறனால், தேசிய கொடிகளைக் கொண்டு, அந்த நாட்டின் பெயர், திருக்குறள்,வரலாற்றுச் சம்பவங்கள் முதலியவற்றை ஒப்பிப்பார்கள். இவர்களுக்கு மட்டும் எப்படி ஞாபக சக்தி இருக்கிறது; நாம் எவ்வளவு மனப்பாடம் செய்தாலும் தலையில் ஏற மாட்டேன் என்கின்றதே என்று வருத்தப்படுபவர்கள் , இதற்காக ,மூளையின் செயல் திறனை பெருக்கும் என விளம்பரப்படுத்தும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு,அந்த மருந்து பாட்டிலின் மூடியை எங்கே வைத்தேன் என்று தேடுபவர்கள் தான் ஏராளம்.
      எல்லோருக்கும் சிந்திக்கும் திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில சமயம் செயல்படாமல்  மறந்து போகிறது.மூளை சரியாக செயல்பட தேவையான சத்துகள் உணவில் இருந்து கிடைக்காததே இதற்கு காரணம். நாம் உண்ணும் உணவில் இருந்தே நம் உடலுக்கும், மூளைக்கும் தேவையான சத்துகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். காரட், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நம் மூளைக்குத் தேவையான வைட்டமின்கள்,பைட்டோகெமிக்கல்கள் அதிகம் உள்ளன. காரட் சாப்பிடாதவர்களை விட சாப்பிடுபவர்களின் மூளை வேகமாக செயல் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
      மனித உடலிலேயே மூளை தான் கூடுகல் ஆக்ஸிஜனை பயன்படுத்துகிறது. மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப் படாமல் இருக்க,பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் அவசியம்.மூளையின் செயல் திறன் குறைவு, ஞாபக மறதி உட்பட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏ,பி,ஈ ஆகிய வைட்டமின்கள் உள்ள உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மூளையை முறையாக பாதுகாத்து பராமரிக்க செர்ரி பழங்கள், பீச்,அவரைக்காய் பெரிதும் உதவுகின்றன.
   மூளைக்குள் இருக்கும் செல்கள், பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளைப் பூண்டுக்கு முக்கிய பங்கு உண்டு. ஞாபக சக்தி பெருக தினம் எரு வெள்ளைப் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் பி வைட்டமின்கள் போதிய அளவு உள்ளவர்கள், கூர்மையான ஞாபக சக்தியையும், அதிக மூளை செயல் பாடும் கொண்டவர்களாக இருப்பர் என்று விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
     பி 6, பி 12 வைட்டமின்கள் குறைவாக கொண்டவர்கள், மறதியும், மனதில் குழப்பம் கொண்டவர்களாகவும் இருப்பர்.ஏனென்றால் இந்த வைட்டமின்கள் நரம்புகளின் மூலம் மூளைக்கு செய்திகளை அனுப்பி,மூளை குழப்பம் இல்லாமல் வேலை செய்ய உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் நாம் நம் குழந்தைகளுக்கு இந்த வைட்டமின்கள் நிறைந்த சத்தான உணவுகளை கொடுத்து, அவர்களை சிறு வயதில் இருந்தே அறிவாளியாக வளர்ப்போம்!

1 comments:

அற்புதமான பதிவு !
பகிர்விற்கு நன்றி !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More