எலும்புகளால் உருவாக்கப்பட்ட கப்பல்            நெப்போலியன் காலத்தில் நடந்த போர்களின் போது, பிரிட்டன் படைகளால், ஏராளமான பிரெஞ்சு படையினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பிரிட்டனில் உள்ள சிறைகளில், பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களில் சிலர், பொழுது போகாத நேரங்களில், சிறிய அளவிலான கப்பல் மாதிரிகளை செய்தனர்.

           இந்த கப்பல்களை செய்வதற்காக, இவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆடு மற்றும் பன்றிகளின் எலும்புகள். இவர்களுக்கு சிறைகளில் ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி வழங்கப்படுவது வழக்கம். அவற்றில் உள்ள எலும்புகளை சேகரித்து வைத்து, இந்த மாதிரி கப்பல்களை உருவாக்கினர்.


          சிறை வளாகத்தில் உள்ள கல்லறைக்கு சென்று, அங்கு கிடைக்கும் மனித எலும்புகளையும் சேகரித்து, இந்த கப்பல்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தி உள்ளனர். எலும்புகள் தவிர, காகிதங்கள், முடி, நூல் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளனர்.


           இந்த அரிய மாதிரி கப்பல்கள், பல கைகள் மாறி, தற்போது பிரிட்டனில் உள்ள, ஏல நிறுவனத்தின் கைவசம் வந்துள்ளது. விரைவில், இவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். பல லட்சம் ரூபாய்க்கு, இவை ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-நன்றி
வாரமலர்

1 comments:

ஆச்சரியாமாய் உள்ளது.தகவலுக்கு நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More