வந்தாச்சு ரோபாட் ஹோட்டல்


      சீனா மற்றும் ஜப்பன் நாடுகள் ரோபாட் -களுக்கு பெயர் போனது. அதன் வரிசையில் சீனாவின் சமிபத்திய கண்டுபிடிப்பு ரோபாட் ஓட்டல்.

    சீனாவின் ஹார்பின் நகரத்தில், வித்தியாசமான ஓட்டல் உள்ளது. இதில் பணிபுரியும் வரவேற்பாளரில் இருந்து, சர்வர் வரை, அனைத்துமே ரோபாட்கள் தான். இந்த உணவகத்துக்கு, ரோபாட் ஓட்டல் என்று தான் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில், 18 ரோபாட்கள் உள்ளன. வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும், “ரோபாட் உணவகம் உங்களை வரவேற்கிறது…’ என பதிவு செய்யப்பட்ட குரலில், ஒரு ரோபாட், வரவேற்கும்.

      சமையல் பணியில் உதவுவதற்கும், சில ரோபாட்கள் உள்ளன. சமை யலுக்கு தேவை யான உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை, இந்த ரோபாட்கள் செய்யும். உணவு தயாரானதும், அதை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்வதும், ரோபாட் தான். இவை நடந்து செல்வதற்காகவே, ஓட்டலில் பிரத்யேக வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒவ்வொரு ரோபாட்டும், 1.3 மீட்டரிலிருந்து, 1.6 மீட்டர் உயரமுடையவை. பத்துக்கும் மேற்பட்ட முக உணர்வுகளை வெளிப்படுத்தும் தொழில்நுட்பமும், இந்த ரோபாட்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சீன மொழியில், ஒரு சில வார்த்தைகளை, இந்த ரோபாட்கள் பேசும்.
          இந்த ரோபாட்களை இயக்குவதற்காக, ஓட்டலின் ஒரு பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பத்து இன்ஜினியர்கள் பணிபுரிகின்றனர்.இந்த ரோபாட்களுக்கு இரண்டு மணி நேரம், “சார்ஜ்ஏற்றினால், ஐந்து மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சீனாவைச் சேர்ந்த பிரபலமான ரோபாட் தயாரிப்பு நிறுவனம் தான், இந்த ஓட்டலை அமைத்துள்ளது. இதற்காக, 44 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஒரு ரோபாட்டை வடிவமைப்பதற்கு, 22 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ரோபாட்களை பிரபலப்படுத்துவதற்காகவே, இவர்கள் இந்த ஓட்டலை துவக்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சாப்பிடுவதற்கு, ஒருவருக்கான சாப்பாட்டு செலவு, குறைந்தது, 1,000 ரூபாய்.

2 comments:

எப்போ இந்தியாவுக்கு வரும்.சப்ளையர்கள் செய்வதுபோல் தாமதம் செய்து திட்டு வாங்கும்.அதுவும் சண்டை வந்தால் அடிக்குமா ?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More