நீங்கள் சிறு குழந்தையின் பெற்றோரா? இதை படிங்க முதலில்!


     எத்தனை செல்வங்கள் இருந்தாலும் வீடு கலகலப்பாக இருக்க வேண்டும் என்றால், அதை நிரப்புவது குழந்தைகள் தான்.குழந்தை பிறக்கும் போது எழுப்பும் அழுகையாகட்டும், தூக்கத்தில் சிரிப்பதாக இருக்கட்டும், பல் முளைக்கும் தருணமாக இருக்கட்டும், முதலில் ‘அம்மா’ என்று அழைப்பதாக இருக்கட்டும், அதன் அழகு தனி தான்.
     குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
  • ·           குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
  • ·           குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
  • ·           அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ·           பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
  • ·           எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
  • ·           உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  • ·           மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.

1 comments:

தாய்மையின் வெளிப்பாடு...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More