பெரியவர்கள் ....?

 சில நாட்களுக்கு முன்பு  அனைவரும் உணவு அருந்திக் கொண்டு இருந்தோம். பக்கத்துக்கு வீட்டு பெண்மணி "செழியன்...செழியன்... "என்று சத்தமிட்டார். என்னவோ ஏதோ, என்று பதறியடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வந்தால் பெரும் அதிர்ச்சி எனக்கு, எதிர் வீட்டு தாத்தா அவர் மனைவியை வாரியலால் அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறார். அவர்களின் பேத்தி சில நாட்களுக்கு முன் தான் பெரிய மனுசி ஆனாள். 

அவர் தகாத வார்த்தைகளால், பாட்டியை திட்ட, பாட்டியோ எனக்கும் பேச தெரியும் என்று தெருவில் நின்று வசனம் பேசுகிறார். கண்ணகி பாண்டியனை கேட்டது போல்,



என்ன சண்டை என்று விசாரித்ததில், அதாங்க ஈகோ, இந்த வயசுல அவங்களுக்கு இது தேவையா, இத நாம கேட்டா "அதெல்லாம் உனக்கு தெரியாது நீ சின்ன பய சும்மா கெடல"என்கிறார்கள்.

இந்த சண்டை நடந்தது எதிர் வீட்டில், பக்கத்துக்கு வீட்டு பெண்மணி ஒருவர் என்னை அழைத்தாரே, அவர் போய் இதனை தடுக்காமல் அடிவிழுவதையும் பார்த்துக் கொண்டு நம்மை அழைத்தார் (நாம என்ன அவ்ளோ பெரிய ஆளா ).

சரி இப்போ மறுபடியும் சண்டைக்கு வருவோம். அந்த தாத்தா சின்ன வயசுல வாலிப முறுக்குல அந்த பாட்டிய அடிச்சு விளாசிருக்கார், அது மட்டும் இல்லாம மாமியார் கொடுமை வேறயாம். இப்போ அந்த தாத்தாவிற்கு மூல வியாதி (பண்ண பாவம் சும்மா விடுமா) காதும் சரியாய் கேட்காது. இந்த பாட்டி சும்மா கெடக்காம அவர் பண்ணதெல்லாம் சொல்லி குத்திக் காண்பிக்கும். 

அவரும் எவ்ளோ தான் பொறுப்பார், பழைய விசயத்த பாடி நினைவு படுத்திடுச்சா,பழைய சக்தி வந்த மாதிரி விளாசுனார் பாருங்க (அம்மாடி....)

பக்கத்துக்கு வீட்டு பெண்மணி ஏன் தடுக்கலை தெரியுமா, இந்த சண்டை போட்டவங்க மக்கள் குடும்பங்களோட மகிழ்ச்சியாய் இருக்காங்க, ஆனா அந்த பெண்மணி அவசரப்பட்டு மகளுக்கு திருமணம் முடித்து அவர் வாழ வெட்டியாய் இருக்கிறார். 

ஒருவர் தவறு செய்தால் அவரை திருத்த முயல்வோம், இல்லையானால் விடுங்கள், குத்தி காட்டுவதால் நமக்கும் மனம் கொதிக்கும், உடல் கெடும்.

நாம் செய்த தவறுக்கு அடுத்தவர் மகிழ்ச்சியை எதிர்ப்பதோ, துன்பத்தில் இன்பம் காண்பதோ என்ன மனப்பாங்கு என்று தெரியவில்லை. 

என்னை போன்ற இள வட்டங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டியவர்களே இப்படி இருந்தால் நாடு என்னவாகும்.

குறிப்பு: அந்த பக்கத்துக்கு வீடு பெண்மணி ஓய்வு பெற்ற ஆசிரியை , (என்னத்த சொல்ல)

5 comments:

ஈகோ, சிறுசு முதல் பெரிசு வரை யாரையும் விடுவதில்லை செழியன்.

வேடிக்கை பார்ப்பதுதான் வேலை வில(ளங்)(க்)குவது இல்லை நம்மிடம் தம்பி...

பல குடும்பங்களின் ஒற்றுமை சீர்குலைவிற்கும் / மனிதனின் முன்னேற்ற வளர்ச்சிக்கு தடை போடுவதும், Ego-(வும்) ஒரு காரணம்... ...ம்...

Ego go go...

நன்றி உங்கள் சொல்வதும் உண்மைதான் , அனைவருக்கும் நன்றி

நல்லதொரு அறிவுரை! நன்றி!

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More