டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…


டென்ஷனா ?

வேலை பளுவா? அல்லது குடும்ப தகறாரா? எதாவது காரனத்தால் அடிகடி டென்ஷன் வருதா? உங்களுக்குதான் இந்த பதிவு.

ஏதாவது இருக்கையில் நேராக அமர்ந்து கொள்ளவும். அல்லது படுக்கையில் தளர்வாக படுத்துக் கொள்ளவும்(காலனி அனிய வேண்டாம்). இரு கைகளின் விரல்களையும் விரைவாக மடக்கி சிறிது நேரம் உள்ளங்கையில் அழுத்தமாக வைத்துவிட்டு, மெல்ல விரியுங்கள். இதை மூன்று முறை செய்தால் போதும்.

பிறகு கண்களை மூடிக்கொண்டு, 8 முறை சீராக மூச்சுவிடுங்கள். னீலவானம், பசுமையான மலை, மலர்கள் நிறைந்த தோட்டம் போன்ற அழகிய இயற்கைகாட்சிகளை மனகண்னால் பாருங்கள்.  ஒரு பரவசௌணர்வு உடல் முழுவதும் பரவும். பிறகு மெல்ல கண்விழியுங்கள். டென்ஷன் ஓடிவிடும்.


தூக்கம் வரவில்லையா ?

படுக்கையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள். 16 முறை மூச்சை ஆழமாக இழுத்து மெல்ல வெளியில் விடுங்கள். பிறகு படுக்கையில் மல்லாந்து படுத்து, 8 முறை ஓரே சீராக சுவாசியிங்கள். அதாவது 1 முதல் 8 வரை மனதில் எண்ணிக் கொண்டு மூச்சை உள்ளே இழுங்கள். சில நொடிகள் மூச்சை உள்ளே நிறுத்திக் கொண்டு 1 முதல் 12 வரை மந்தில் எண்ணிக் கொண்டு மூச்சை வெளியேற்றுங்கள்.

பிறகு , வலதுபுறமாக ஒருக்களித்துப் படுத்து 16 முறையும், இடதுபுறமாக ஒருகளித்துப் படுத்து 32 முறையும் சீராக சுவாசித்து விடுங்கள்.  பிறகு உடலை தளர்வாக்கிக் கொள்ளுங்கள். சுகமான தூக்கம் வரும்.


இன்னொறு முறை:

உறைந்த தயிரின் மேல் நிற்க்கும் தெளிந்த நீரை எடுத்து, உள்ளங்களில் அழுத்தித் தேய்த்து விட்டு படுத்துக் கொள்ளுங்கள். மனதில் எதாவது எண்ணம் ஒடினால், கண்னை மூடி அதை ஆழ்ந்து கவனியுங்கள். அந்த எண்ணம் நின்றுவிடும். ஆழ்ந்த உறக்கம் வரும்.

டிஸ்கி : இது பூம்புகார் கடற்கரையில் சுண்டல் வாங்கிய பேப்பரில் இருந்த தகவல்.

2 comments:

டென்சனை குறைக்கும் ஆலோசனை அருமை.ஆனால் இதை செய்யும்போது டென்சன் இல்லாமல் இருக்க வேண்டும்

இது பூம்புகார் கடற்கரையில் சுண்டல் வாங்கிய பேப்பரில் இருந்த தகவல்.

அருமையான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு
மிக்க நன்றி!...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More