பற்களை பாதுகாக்க வந்தாச்சு தொழிற்நுட்பம்…!


பற்களை பாதுகாக்க வந்தாச்சு தொழிற்நுட்பம்…!


மனிதர்களின் தொழிற்நுட்ப கண்டுபிடிப்பிற்கு அளவே இல்லாமல் போய் விட்டதுங்க! ஆமாம் நம்பினால் நம்புங்கள்: பற்கள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புக் குறித்த சிகிச்சை, சிந்து சமவெளி நாகரிகம் உருவானபோதே, தொடங்கிவிட்டது. இதோ, சில சமீபத்திய அயல் நாட்டு கண்டுபிடிப்புகள். இங்கே இவை அறிமுகமாக, குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும்.



· நைசான கண்ணாடித் தூள் கலந்த டூத் பேஸ்ட் அமெரிக்காவில் பிரபலம். பற்கள் பாழாகாமல் கூசாமல் இருக்க உதவுவதோடு, பளபளப்பையும் தருகிறது.

· மேல் வரிசைப் பற்களில் கூடுதலான நேரம் பல்லின் வேரைச் சரிபார்க்க உதவும் வகையில், அனஸ்தடிக் ஸ்ப்ரே வந்து விட்டது. ஈறு நோய்களையும், பற்கள் சிதைவையும் தடுக்கும் மாயமந்திரம் போல் சிகிச்சை!

· கன்னச் சதையிலுள்ள செல்களைப் புதிய ஈறின் திசுக்களாக மாற்றலாம். கம்ஷீல்ட் என்ற ஈறு-மூடி, பற்கள் சரியான வரிசையில் இருக்க உதவும். இப்போது வர ஆரம்பித்திருக்கிற பிரேஸ்கள் போடுவது நல்லது.

· கீ-ஹோல் டென்டல் இம்ப்ளான்ட் சர்ஜரி, அதிகமாகத் துளை போடாமல், விரைவில் குணமடைய உதவும். அனஸ்தடிக் (மயங்கியிருக்கும்) நிலையை உடனடியாக மாற்ற வழி இருப்பதால், ஃபில்லிங் முடிந்தவுடன் மரத்துப் போனநிலை பல மணி நேரம் இருக்கத் தேவையில்லை.

· பற்களின் நிறத்திலேயே ஃபில் அப் கிடைத்தால், மேல் பூச்சு தேவையில்லை. புதிய வாய்ப் பாதுகாப்பு ( மவுத்கார்ட்) கிடைக்கிறது. நீங்கள் மென்று தின்ன அதிகம் சிரமப்பட வேண்டாம். இது தசைக்குக் கூடுதல் பலம் தருகிறது.

· வாய் உமிழ்நீரை சோதனை செய்தால் கான்சர் முதல் டயபடீஸ் வரை, பல நோய்களைக் கண்டுபிடித்துவிடலாம். பற்கள் கெடுவதைத் தடுக்கும் பல அம்சங்கள் தேங்காய் எண்ணெயில் இருக்கின்றன.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More