நீங்கள் நான் - ஸ்டிக்-பாத்திரங்கள் பயன்படுத்துபவரா?

நீங்கள் நான் - ஸ்டிக்-பாத்திரங்கள் பயன்படுத்துபவரா?


நான் - ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கானது தான் இவை.

ஆம், வளர்ந்து வரும் நாகரிகம் சமையலறையையும் விட்டு வைக்கவில்லை. முன்னொரு காலத்தில் மண்பானை என்றொன்று இருந்தது, என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு, தொழிற்நுட்ப சாதனங்கள் நம் சமையலறையை நிறைத்துள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பது நான் - ஸ்டிக்-பாத்திரங்கள். இதை பெண்கள் மிகவும் விரும்பக் காரணம் அதன் நிறம்,வடிவமைப்பு மட்டுமின்றி இதை உபயோகிக்கும் போது மிககுறைவான எண்ணெய் மட்டுமே போதும் என்பதுதான். எண்ணெய் பயன்பாடு குறைவதால் பலவிதமான நோய்கள் தடுக்கப்படுவதுடன் உடலுக்கும் ஆரோக்கியம்.


ஆனால் அதை முறையாக பயன்படுத்தும் முறை பலருக்குத் தெரிவதில்லை. பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சமைக்கும் சமையலறையில் முக்கிய இடம் பிடித்திருக்கும் நான் – ஸ்டிக்- பாத்திரங்கள் பற்றிய சில குறிப்புகள்.

நான் – ஸ்டிக்- பாத்திரங்கள் பயன்படுத்தும் முறைகள்!


.

சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.
 குறைந்த மிதமான சூடு போதுமானது

 உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.

 கழுவியவின் மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.

 சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.

 கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

 மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.

 நான் - ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.

 பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில், ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More