"சனிப் பிணம் தனிப் போகாது !"


பூமி அன்னையின் காலண்டரில் கிழமைகள் என்பதே கிடையாது.

நிலவின் நடமாட்டத்தை வைத்து மாதத்திற்கு முப்பது நாள் என்று பிரித்ததிலாவது அர்த்தம் இருக்கிறது. மாதத்தை நான்கு வாரங்களாக பிரித்ததற்கோ, வாரத்தை ஏழு நாட்களாகப் பிரித்ததற்கோ எந்த அர்த்தமும் இல்லை.

நம் வசதிக்காக ஒவ்வொரு நாளுக்கு  ஒரு பெயர் கொடுத்தோம், அவ்வளவு தான். சனி என்ற வார்த்தை மீது இந்த கலாசாரத்தில் மனிதன் கொண்ட வெறுப்பின் காரணமாக அந்த தினத்தில் நிகழும் மரணத்தைக்கூட மிரட்சியுடன் பார்க்கிறான். மற்றபடி இதில் எந்த அனுபவரீதியான உண்மையும் இல்லை.

ஆன்மீகத்தின் பெயரை சொல்லி கொண்டு, தங்களை திரும்பிப் பார்க்க வைக்க சிலர் இப்படி எதையாவது உளறிக்கொண்டே இருப்பார்கள்.  அப்படி உலவ விட்ட  அபத்த வாக்கியங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.

சந்தேகமிருந்தால், சனிக்கிழமை தவிர, மற்ற தினங்களில் ஒரு பிணத்துக்கு மேல் வருவதில்லையா என்று சுடுகாட்டில்/மின்மயானத்தில் கேட்டுப் பாருங்கள்.....

மூன்றாவது கோணம் புத்தகத்திலிருந்து 

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More