Latest News

காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்



காலை தேநீர்

           நண்பர்கள் அனைவருக்கும் இந்த நாள் பயனுள்ளதாக அமையட்டும்.தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.



Ø  பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
Ø  திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
Ø  பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
Ø  சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
Ø  அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.

தினம் ஒரு தகவல்

பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

Follow by Email

Recent Post