வாழை மரம்!!!

வாழை மரம் (அங்குசம் (அ) அன்பனம்)
தாவரவியல் பெயர் - முசா பரடியாசிக்கா

இம் மூலிகையின் பெயர் "வாழை மரம்". வாழை மரத்தை அதன் அடிப் பகுதிவரை வெட்டிவிட்டு,  பின் மரத்தின் அடிப் பகுதியில் உள்ள தண்டில் குழி போல் வெட்டி எடுத்து விட வேண்டும். பின் அதை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பார்த்தால் குழியில் நீர் ஊறி இருக்கும். அந்த நீரை மட்டும் தனியாக எடுத்து காலையிலும் மாலையிலும் அரை தம்ளர் அளவு நான்கு நாட்கள் வரை சாப்பிட்டு வர பெண்களுக்கு தூவாழையாக  போவது குணமாகும்.

மேலும் வயிற்றுப்  புண், சூடு, மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களும் குணமாகும். வாழை கிழங்கில் ஊறுகின்ற நீரானது பேரு வயிறு இரத்தக் கிரிசாரம், எரி மூத்திரம், அற்பவிரணம் , சோமரோகம் அயர்வு உழலை நோய், பாண்டு, எலும்புருக்கி ஆகியவைகளை நீக்கும். தேகதிருக்கு வன்மையை உண்டாக்கும்.

Thanks to Ngana Sutchuma Thiravugol part 2 book

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More