நீங்கள் எப்போதும்ம 'ஏசி'-யிலே இருக்கறீங்களா?

ஆம் என்றால் இதை படீங்க முதலில்...!


வெயில் காலம் அரம்பமாகிவிட்டது. ஆதலால் வெயில் தாக்கத்தில் இருந்து விடுபட நாம் பல்வேறு முயற்சிகளை கையாள்கிறோம்.அதில் முக்கியமானது என்னேரமும் ஏசி அறையில் இருப்பது.எப்போதும், "ஏசி' அறையில் அமர்ந்திருப்பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை, வைட்டமின் - "டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விடும்.
* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக இருப்பது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது ஆகியவற்றால், வைட்டமின் "டி' சத்து குறைந்து எலும்பு பாதிப்பு ஏற்படும்.

தடுக்க என்ன செய்யலாம்:

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், 30 நிமிடமாவது உடலில் வெயில் பட வேண்டும்.
* ஒரு சராசரி மனிதன், ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
எப்போதும், "ஏசி' அறையில் இருப்பது, இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - "டி' சத்து குறைவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.
இதுபோல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின், "டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரிய வந்தது. இதனால், வைட்டமின் "டி' சத்துக் குறைபாட்டை நீக்க, மத்திய அரசு தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளிபடுவது அதிகம். ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. நகர்புறங்களில் சூரிய வெளிச்சம் படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.
வைட்டமின் - "டி' குறைபாட்டால், சுவாசக்கோளாறு முதல் புற்றுநோய் வரை வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும், இது காரணமாக அமைகிறது.
வயது, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை தாண்டி, பல தரப்பினரிலும் வைட்டமின் - "டி' குறைபாடு உள்ளது. வைட்டமின் - "டி' இருந்தால்தான், கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால், பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More