அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி: ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு:

 "பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துரதிஷ்டம். துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். தட்டிக் கழித்து விட்டுப் போனவர்கள் அதிர்ஷ்டசாலிகள், சுகமயிருக்கிறார்கள்" என்பது போல் இதை புரிந்து கொள்வது முற்றிலும் தவறு.

துன்பமோ ஆனந்தமோ அது சூழ்நிலைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் தான் முடிவாகிறது.

சனி, குரு என்று எதற்காக கிரகங்களை வம்புக்கு இழுக்க வேண்டும்? உங்களை மாற்றிக்கொள்ள நீங்களே தயாராக இல்லாதபோது, பல நூறு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்கள் எப்படி உங்களை மாற்றப் போகின்றன?

அகப்பட்டவன் என்று யாரை குறிப்பிட்டிருக்கிறார்கள்?

புதிய முயற்சிகள் செய்ய துணிவின்றி, பாதுகாப்பு என்று கருதி  இருக்கும் இடத்திலேயே அகப்பட்டுக் கொண்டவன் எந்த வளர்ச்சியும் காண்பதில்லை. செய்வதை விரும்பிச் செய்யாமல், தன்னை அதிர்ஷ்டமற்றவனாக நினைத்து, அயர்ச்சியுடன் செயலாற்றுபவன் மேல்நிலைக்குப் போவதில்லை. சூழ்நிலைகளால் சிறைப்பட்டு சிக்கிக் கொண்டவனுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

மாறாக ஓடிப்போனவன் யார்?

இருக்கும் இடத்திலேயே அகப்பட்டுக் கொள்ளாமல். துணிச்சலுடன் புதியனவற்றை தேடி வெளியே அடியெடுத்து வைப்பவன். அவன் புதிய அனுபவங்களை பெரும் அதிர்ஷ்டசாலியாகிறான்.

யார் மீதும் குற்றம் சுமத்தாமல், முழுப் பொறுப்புடன் அவன் செயலாற்றும் பொது உற்சாகமும், ஒளிவீசும் எதிர்காலமும் அவனோடு கைகோர்த்துக் கொள்கின்றன. விரும்பியதை பெரும் புதிசாலித்தனமே அவனுடைய அதிர்ஷ்டமாகிறது.

எனவே.......

அயர்ந்து போய் அகப்பட்டவராக இருக்காதீர்கள். பல திசைகளில் உற்சாகத்துடன் ஓடத் தயாராக இருங்கள்.  

மூன்றாவது கோணம் புத்தகத்திலிருந்து 

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More