உங்களுக்கு இள நரைத் தொல்லை இருக்கிறதா?



நரைமுடி வரக் காரணங்கள்:



 தைராய்டு குறைபாடு, பி12 வைட்டமின் குறைபாடு, வெண்படை போன்ற தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், புகைப்பழக்கம், புரதச்சத்து குறைபாடு, பரம்பரை ஆகியவை, நரை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து, மெலனின் உற்பத்தியை குறைத்து, நரையை அதிகப்படுத்துகின்றன.

தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, வேர்க் கால்களை சேதமடையச் செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே, நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு, பி.சி.எல்., என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது.

இளம் நரையை கட்டுப்படுத்த சில வழிகள்


                       
Ø  வைட்டமின், ".டி.,' சத்து நிறைந்த உணவுகளை, அதிகம் சாப்பிடுங்கள். மாமிச உணவுகளான, ஈரல், மீன் எண்ணெய், பால், வெண்ணெய் போன்றவற்றில், அவை அதிகம் உள்ளன.
Ø  அதிகமான மன நெருக்கடி, டென்ஷன் அடைந் தாலும், முடி நரைக்கும். டென்ஷனை குறைப்பது நல்லது. முடிந்த அளவு, "ஹேர்டை' உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.
Ø  வெந்தயத்தை இரவே ஊறவைத்து, மறுநாள் அரைத்து தலையில் தடவி, ஊறிய பின் குளித்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
Ø  நனைந்த முடியை, சின்ன சீப்புக்களால் சீவாதீர்கள். பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்துங்கள்.
Ø  இருபது நாட்களுக்கு ஒரு முறை, முடியின் கீழ் பகுதியை அளவாக கத்தரித்து விட்டால், நுனிப்பகுதி முடி முறிந்து போவதை தடுக்கலாம்.
Ø  தலைக்கு, "ஷாம்பு' போடுவதற்கு முன், முடியை நன்றாக பிரஷ் செய்யவும். அப்படிச் செய்தால், தலையில் ரத்த ஓட்டம், அதிகரிக்கும். தலையில் இருக்கும் துகள்களும் போய்விடும்.
Ø  கறிவேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, அந்தச் சாறு அளவிற்கு, தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, வெண்ணெய் உருகுவது போல் வந்ததும், வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து வந்தால், நரைமுடி மறையும்.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
மேலும், முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா.இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால், பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தைக் கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன.

கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய், மருதோன்றி இலைகள், கறிவேப்பிலை இலைகள், அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, 500 மி.லி., சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியை கலந்து, கொதிக்க வைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து, 15 நாட்கள் சென்றதும், மீண்டும் ஒருமுறை வடிகட்டி, தலையில் தேய்த்து வர, நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும்.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif



0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More