தென்னை கழிவில் காளான் உற்பத்தி!


தென்னை கழிவில் காளான் உற்பத்தி!


  ஒரு தென்னை வளர்த்தால், அது நம் ஒரு தலைமுறைக்கு பயன் தரும் என்று சொல்வார்கள். தென்னையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் நமக்கு பயன் தரும். தென்னையில் இருந்து பெறப்படும் இளநீர், மட்டை மட்டுமின்றி இப்பொழுது அதன் கழிவில் இருந்து காளான் காளான் தயாரிக்கும் முறை பிரபலம் அடைந்துள்ளது. தென்னை கழிவுகளை அடிப்படை பொருளாகக் கொண்டு சிப்பிக் காளான் தயாரிக்கும் முறையை கேரள மாநிலம், காசர் கோட்டில் உள்ள, மத்திய பண்ணை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது.
    தென்னை குலை கழிவு, இலை மட்டை மற்றும் கயிற்றுக் கழிவுகளை தகுந்த விகிதத்தில் கலந்து, அடிப்படை பொருளாக பயன்படுத்தலாம்.சராசரி 1 கிலோ காய்ந்த மட்டை மற்றும் குலைக் கழிவின் மூலம், 570 முதல் 590 சிப்பி காளானை , 60 முதல் 70 நாட்களில் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
    பாலிதீன் பையை பயன்படுத்தி, 3 சதவித காளான் விதையை பல அடுக்கு முறையில் தூவி இதை உற்பத்தி செய்யலாம். நான்கு தென்னை மரங்களுக்கு இடையில் காளான் குடில் அமைத்து, அதன் மூலம் காளான் உற்பத்தி செய்யலாம். யூரியா, சூப்பர் பாஸ்பேட் கரைசலை தெளித்தால், காளான் விரைவாக வளரும். புளுரோட்டஸ், புளோரிடா மற்றும் புளுரோட்டஸ் சாஜர் காஜூ போன்ற காளான் வகைகள் , தென்னை கழிவுகளை அடிப்படையாக பயன்படுத்தி தயாரிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு,
என்ற இ-மெயில் மூலமாகவோ,
என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம்.

நன்றி
தினமலர்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More