சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே.....!
திரு பன்சல் அவர்களின் ரயில் பட்ஜெட்,  திரு சிதம்பரம் அவர்களின் வருடாந்திர பட்ஜெட் எல்லாம் வந்தாயிற்று. வழக்கம்போல ஆளும் கட்சி ‘நாங்கள் கொடுத்திருக்கும் இந்த பட்ஜெட் போல முன்னே யாரும் கொடுத்ததே இல்லை; இனி யாரும் கொடுக்கப் போவதும் இல்லை’ என்று முழங்கிவிட்டு ஓய்ந்துவிட்டது. எதிர்கட்சிகள், ஆளும் கட்சியின்  மீதான தங்கள் சாடலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த பட்ஜெட்டுகளில் ஏதாவது புதுமை உண்டா தெரியாது. ஆனால் ரயில் பட்ஜெட் பற்றிய செய்திகளின் நடுவே ரயில் நிர்வாகம், நம்மூர் ரயில்களின் வேகம் என்று சிலபல  சுவாரஸ்யமான குட்டிக்குட்டி செய்திகளை போட்டிருந்தது டைம்ஸ் பத்திரிக்கை.

அவை உங்களுக்காக இதோ. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக!

ரயில்களின் வேகம் என்று பார்த்தால் பிரான்ஸ்(350 கி.மீ./ ph), பெல்ஜியம்(3௦௦ கி.மீ/ ph), ஜெர்மனி (3௦௦ கி.மீ. / ph), ஜப்பான்(3௦௦ கி.மீ./ph)  நாடுகளின் அருகில் கூட நாம் போக முடியாது. சீனர்கள் (3௦௦ கி.மீ./ph) கூட  நம்மைவிட வேகமாக ரயில்களை இயக்குகிறார்கள்.

 • முதல் ராஜ்தானி விரைவு வண்டி ஹௌராவுக்கும், புது தில்லிக்கும் இடையே 1969 ஆம் ஆண்டு ஓடத் துவங்கியது. இப்போது தில்லியையும் வேறு பல நகரங்களையும் இணைக்கும் ராஜ்தானி தான் மிக விரைவு வண்டி. மணிக்கு 140 கி.மி. வேகத்தில் மிக நீண்ட தூரம் போகும் ரயில் இதுதான்.
 • வேகமாகச் செல்லும் ரயில்களின் தேவை இருந்தாலும், நம் நாட்டில் விரைவு வண்டிகளுக்கென்று தனிப்பட்ட ரயில் தடங்கள் இல்லாதது பெரிய குறைதான்.
 • மிகச் சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் : LB – ஒடிஷாவில் உள்ளது.
 • மிக நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் :ஸ்ரீவேங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா – ஆந்திரப்பிரதேசம்
 • நிறுத்தங்கள் இல்லாமல் செல்லும் நீண்ட தூரப் பிரயாணம்: 528 கி.மீ. வதோதரா என்றழைக்கப்படும் பரோடாவிற்கும், ராஜஸ்தானில் உள்ள கோட்டாவிற்கும் இடையில் இந்த தூரத்தை திருவனந்தபுரம்- ஹசரத் நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு வண்டி. 6.5 மணி நேரத்தில் கடக்கிறது.  
 • அதிக பட்ச நிறுத்தங்கள் கொண்ட விரைவு வண்டி : ஹௌரா-அமிர்தசரஸ் விரைவு வண்டி. மொத்தம் 115 நிறுத்தங்கள்.
 • புது தில்லி-போபால் ஷதாப்தி விரைவு வண்டி அதி விரைவு வண்டி 704 கி.மீ. தூரத்தை 7 மணி 5௦ நிமிடத்தில் கடக்கிறது. ஃபரிதாபாத் – ஆக்ரா இடையே தனது அதிகபட்ச வேகத்தை – 150 கி.மீ./ ph எட்டுகிறது.
 • தாமதமாக வந்து பெயர் வாங்கும் ரயில்: கௌஹாத்தி-திருவனந்தபுரம் விரைவு வண்டி இந்தப் பிரயாணத்தின் மொத்த நேரம் 65 மணி நேரத்திற்குச் சற்றுக் கூடுதல்! கிட்டத்தட்ட 1௦ லிருந்து 12 மணி நேரத் தாமதம் எப்பவுமே! (என்னக் கொடுமை இது சரவணன்?)

முதல் ரயில் எப்போது விடப்பட்டது பார்ப்போமா?
 •             இந்தியாவின் முதல் ரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு போரி பந்தர் (Bori Bunder) என்ற இடத்திலிருந்து 21 முறை துப்பாகிகள் வெடித்து மரியாதை செலுத்த  புறப்பட்டது.
 •             இந்த வண்டி 14 பெட்டிகளுடன்  சாஹிப், சிந்த், சுல்தான் என்று மூன்று புகை இஞ்சின்கள் இழுக்க 400 விருந்தாளிகளுடன் தன் முதல் பயணத்தை தொடங்கியது.

அறிமுகங்கள் சில பார்க்கலாம்:

 • முதல் ரயில்: பம்பாயிலிருந்து தானே – வருடம் 1853, 4 கோச்சுகள்  400 பிரயாணிகள்
 • முதல் ரயில் பாலம்: டபூரி (Dapoorie viaduct) வயாடக்ட் – மும்பை-தானே வழித்தடத்தில்.
 • முதல் மின்சார ரயில் பாம்பே வி.டி. இலிருந்து குர்லா – 1925 ஆம் ஆண்டு 
 • முதல் ஏ.சி. கோச்: வருடம் 1925
 • முதன்முதலாக டாய்லெட் வசதி 1891 ஆம் வருடம் முதல் வகுப்பிற்கும் மற்ற வகுப்புகளுக்கு 1907 ஆம் வருடமும் ஏற்படுத்தப்பட்டது.
மற்ற தகவல்கள்:
 • நீண்டதூரம் ஓடும் ரயில்: கன்னியாகுமரியிலிருந்து டிப்ரூகர் வரை 4,286 கி.மீ.
 • நீண்ட நேரம் ஓடும் ரயில்: கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு தாவி வரை 3751 கி.மீ. தூரத்தை ஹிம்சாகர் விரைவு வண்டி 74 மணி  55 நிமிடங்கள்.
 • குறைவான தூரம் ஓடும் ரயில் நாக்பூரிலிருந்து அஜ்னி வரை : 3 கி.மீ.
 • மகாராஷ்டிரா அஹ்மத்நகரில் ஒரே ரயில் நிறுத்தத்தின் இரண்டு பக்கங்களிலும் வேறு வேறு ரயில் நிலையங்கள்! ஸ்ரீராம்பூர் ஓர் பக்கமும், பேலாபூர் ஒரு பக்கமும் அமைந்திருக்கின்றன.
 • நவபூர் ரயில் நிலையம் பாதி மகாராஷ்ட்ராவிலும், பாதி குஜராத்திலும் அமைந்திருக்கிறது. பவானி மண்டி ரயில் நிலையம் பாதி மத்திய பிரதேசத்திலும் பாதி ராஜஸ்தானிலும் இருக்கிறது.
 • நேரோ கேஜ், மீட்டர் கேஜ், பிராட் கேஜ் என மூன்று கேஜ்களும் அமைந்திருக்கும் ஒரு ரயில் நிலையம் சிலிகுரி.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் இருக்கும் கடைசி ரயில் நிலையங்கள்:

வடக்கு : ஜம்மு அண்ட் காஷ்மீர்
தெற்கு: கன்னியாகுமரி
கிழக்கு: லேடோ – அஸ்ஸாம்
மேற்கு: நாலியா – குஜராத்

பல்வேறு நகரங்களை இணைக்கும் நம் ரயில்வே நிர்வாகம், பல விளையாட்டு வீரர்களையும் தனது அலுவலகத்தில் பணி அமர்த்திக் கொண்டுள்ளது.

நமது கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோணி முதலில்   தென்கிழக்கு ரயில்வே, கரக்பூர் பகுதியில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் டிக்கெட் கலெக்டர் ஆக  பணியாற்றினார்.

பொதுவாக அமைச்சர்கள் பட்ஜெட் வழங்கிப் பேசும்போது நடுநடுவே சில கவிதைகளையும் சொல்லுவார்கள். திரு பன்சல் சொன்ன கவிதை இதோ:

            Song of the Engine by Christine Weatherly
When you travel onthe railway,
and the line goes up a hill,
just listen to the engine
as it pulls you with a will.
Though it goes so very slowly
it sings this little song
I think I can, I think I can
And so it goes along.....

மேலிடத்தை சந்தோஷப்படுத்தும் பட்ஜெட் கொடுக்க “I think I can... “ என்று மனதில் நினைத்துக் கொண்டே இந்தக் கவிதையை திரு. பன்சல் வாசித்திருப்பாரோ?

7 comments:

அழகிய தொகுப்பு !

பயனுள்ள பல தகவல் இடம் பெற்றுள்ள ஒரு மினி பட்ஜெட் போல் உள்ளது :)

தொடர வாழ்த்துகள்...

நல்ல தொகுப்பு அம்மா.... நன்றி...

பயனுள்ள தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் .

நன்றி சேக்கனா!

நன்றி தனபாலன்

நன்றி கவியாழி!

நல்ல தொகுப்பு. பேப்பரில் இருந்த பக்கங்களை பார்த்து, படிக்கவில்லை. சிறு குறிப்புகள், சுவாரசியமாக உள்ளன. நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More