உங்கள் வீட்டிலும் இதை கண்டிப்பாக முயற்சியுங்கள்


கோடை வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. சென்னை போன்ற ஜன நெரிசல் மிகுந்த நகரங்களில் சாதரணமாகவே புழுக்கம் தாங்க முடியாமல் இருக்கும். அதுவும் கோடை காலம் என்றால்   சொல்லவே வேண்டியதில்லை...

இங்கே நான் சக நண்பர்களுடன் பகிர விரும்புவதெல்லாம்,,,

நாம் மனிதர்கள் 

நம்மாலேயே கோடையை சமாளிக்க முடியாமல்,  சிக்னல் விழுந்தால் அந்த 30 வினாடிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் நிழலை தேடி ஒண்டுகிறோம்.

கால் நடைகள், குருவிகள், காக்கைகள் போன்ற மனிதனுடன்  தொடர்பு கொண்டு வாழும் சிறு சிறு ஜீவன் என்ன செய்யும் இத்தகைய தகிப்புகளில்?

பெரும்பாலும் மரங்களை வேரோடு வெட்டி போட்டுவிட்டோம். அந்த ஜீவன்கள் எங்கே போய் தங்கும்?

இன்றைய காங்கிரிட் வீடுகளின் கூரைகளிலா கூடு  கட்டி வாழும்?

நமது பரம்பரை ஆண்ட பூமி என்று உயிரை கொடுத்து மீட்க போராடும் குணம் நமக்கு உண்டல்லவா? அதுபோல தானே அந்த உயிர்களும் போரட எண்ணும். அதற்காக பழைய வளமைகளை இனி கொண்டு வர முடியாது தான். ஆனால் பரிகாரமாக ஏதாவது செய்யலாம் அல்லவா?

அந்த வகையில், நமது வீட்டில்

பெரிய மரம் நட இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை சிறு தொட்டிகளில் செடிகளை வளருங்கள். 

அதன், அருகில் ஒரு சிறிய தொட்டி அல்லது உடைந்த பழைய குடத்தின் அடிபாகம் என்று ஏதாவது ஒரு பாத்திரத்தில் தினமும் காலையில் தண்ணீரை ஊற்றி ஓரமாகவோ அல்லது கொஞ்சம் நிழல் உள்ள பகுதியிலோ வையுங்கள்..
எங்கள் வீட்டில் இந்த பழக்கம் எங்கள் பாட்டி காலம் தொட்டே இருக்கிறதது.. மாலைஆகும் போது குருவிகள் தண்ணீரில் தலை முக்கி எடுத்து  சிளிர்த்து விளையாடும் அழகை ரசியுங்கள். மனது லேசாகும்.

கொஞ்சம் மீதமாகும் சோற்றுப் பருக்கைகளை அதன் அருகில் தூவியும் விடலாம். இன்னும் அவற்றிர்கான இரை தேடும் சுமையை குறைக்க கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்

மீதமாகும் திராட்சை, மாதுளை போன்ற பழங்களை   குப்பையில் கொட்டாமல் நீங்கள் வளர்க்கும் செடிகளுக்கு போடுங்கள்

தயவு செய்து உணவுக்காக வரும் காக்கை போன்ற உயிரினங்களை விரட்டி  விடாதீர்கள்... 

அவைகளும் நம்முடன் சமமாக வாழ பிறந்தவைகள் தான்.


4 comments:

சொன்னதனைத்தும் மனதை சந்தோசப்படுத்தும்...

வாழ்த்துக்கள்...

உண்மை தான்

நானும் அதனை என் வீட்டில் செய்துள்ளேன். தளத்தின் இணைப்புகள் வேலை செய்வதில்லையே , ஏன் ?

//அவைகளும் நம்முடன் சமமாக வாழ பிறந்தவைகள் தான்.// True words

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More