உலகமே பேர் சொல்லும் பேர் கிரில்ஸ் - டிஸ்கவரி ஹீரோ !!


பேர் கிரில்ஸ் - Bear Grylls


அமேசான் காடுகளில் இவர் நுழைந்தால் அங்குள்ள பாம்புகள், பூச்சிகள், பல்லி என அனைத்துமே மூச்சு விடாமல் அமைதியாய் எங்கேனும் போய் ஒளிந்துகொள்ளும். பின்னே..? தலைய காட்டுனா, தலைய மட்டும் விட்டுட்டு அப்படியே சாப்பிட்டு விடுவார் பேர்.

டிஸ்கவரி சேனலில் மென் வாசஸ் வைல்டு என்னும் அட்வென்சர் நிகழ்ச்சியை பேர் கிரில்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.

பேர் ஒரு அசாதாரமான மனிதர். நிஜத்தில் இவர் ஒரு ஹீரோ தான்.

2500 அடி உயரத்தில்  கிலைடரில் இருந்து தலைகீழாய் குதிப்பது முதல் -20 டிகிரி குளிரில் வெற்று உடம்புடன் நீரில்  குதித்து மறுகரையை அடைவது வரை எதையும் துணிந்து செய்துகாட்டுவார்.

.com @ Rs.599

பேர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். மூன்றாண்டுகள் பிரிட்டிஸ் ராணுவத்தில் ஸ்பெசல் ஃபோர்ஸில் பணிபுரிந்தவர்.

ஒரு சுவாரசியமான விசயம், பேர் தனது 23 வது வயதிலேயே இமயமலையின் எவரஸ்டில் ஏறிய இளைஞனாக கின்னசில் இடம் பிடித்தவராவார்.

பேர் ஓரு முறை சகாராவில் தனது சாகத்தை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு தேன் கூட்டில் சிறு  தேன் ஆடையை பிய்த்து எடுப்பார் அப்பொழுது ஒரு தேனீ கொட்டி அவரது முகம் வேகமாக வீங்கி விடும். தான் சந்தித்த வேட்டைகளில் இது தான் மிகவும் மோசமான தவறு என்று பலமுறை சொல்லி இருக்கிறார். உயிருக்கு ஆபத்தான பல காட்சிகளில் பேரினை படம் பிடிக்கும் பொழுது நெஞ்சம் படபடக்கும் என்று இவரது ஆஸ்தான கேமரா மேனான சைமன்  கூறுகிறார்.

ஒரு முறை, இருவர் மட்டுமே அமரக்கூடிய கிலைடர் விமானத்தில் இருந்து பேர் தலைகீழாய் குதிப்பதை படம்   பிடிக்க வேண்டியிருந்தது.  அந்த விமானத்தில் இருந்து பேர் அப்படியே குதித்தால் இறக்கைகளில் அடிபடும் வாய்ப்பு இருந்ததால் விமானத்தையே தலைகீழாய் தீருப்பி பேர் கீழே குதிக்க அதை படமாக்கும் முயற்சியில் இருந்தார் சைமன். அப்போது அவர் தனது கேமாராவுடன் எங்கே இருந்தார் தெரியுமா..?? 

நம்புங்கள், விமானத்தின் இறக்கையின் ஒருபுறத்தில் பாதுகாப்பு கயிறுகளால் கட்டி நிற்கவைத்து விட்டனர். சைமன் இதை நினைவுகூர்ந்து சிரிக்கிறார்.

பேர் எப்பேர்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து விடுவார். பேர் ஒரு எழுத்தாளர்ராகவும், சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சாகச வீரரகாவும் பன்முகங்களோடு விளங்குபவர். 

ஒவ்வொரு  நிகழ்சியையும் சரியாக திட்டமிட்டு செய்வார் பேர்.

பேர் கிரில்ஸ் ஒரு   நிஜமான சூப்பர்மேன் தான்.

2 comments:

நிச்சயம் இதைப் பார்க்கையில் நமக்கு கொஞ்சம் விடா முயற்சி அவரிடமிருந்து தொற்றிக் கொள்வது உறுதி

சரிதான் தமிழ்ராஜா...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More