2013 ன் உலகத்தை உள்ளங்கையில் அடக்கி வைத்திருக்கும் மூன்று பணக்கார இளைஞர்கள்

    இளைஞர்களின் சக்தி மகத்தானது. இன்று உலகையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் முக்கிய மூன்று இளைஞர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பெரிதாக பின்புலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் இல்லை இவர்கள். விடா முயற்சியால் இன்று விண்ணை அளக்கும் சாதனையாளர்கள்.

சோதனைகளின் போது சோர்ந்து போகாமல் போராடியவர்கள். இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் மிகவும் இளைஞர்களாக திகழ்பவர்கள். 

செர்ஜி ப்ரின் - Sergey Brin



கூகுள் நிறுவனத்தின் நிறுவனரில் ஒருவர் செர்ஜி ப்ரின் ஆவர்

வயது : 39
இவரின் சொத்து மதிப்பு :  $ 22.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

கூகுள் தேடுபொறியின் முக்கிய காரணகர்த்தாவாக இயங்குபவர். இப்பவும் கூகுள் தினம்  தினம் பல மாறுதல்களை உண்டாக்கி வருவதில் முக்கிய பங்கு செர்ஜிக்கு உண்டு. 

லார்ரி பேஜ் - Larry Page


   கூகுள் நிறுவனர்களில் மற்றுமொருவரான லார்ரி பேஜ் கட்டற்ற மென்பொருளான கூகுளின் அல்காரித அமைப்பு இவரின் திறனால் தான் மெருகேரி இன்று அனைவருக்கும் அனைத்தையும் இணையத்தில் எளிதாக்கி வைத்திருக்கிறது.

வயது : 39
லார்ரி பேஜ்ஜின் சொத்து மதிப்பு : $ 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

   லார்ரியின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதென்றால் அவர்கள் ஊளியர்களுக்கு கொண்டாட்டம் தான். தன் பணியாளர்கள் மனநிலையை உணர்ந்து அலுவலகத்தையே ஒரு பெரிய விளையாட்டு கருவியாக மாற்றி வைத்திருக்கிறார்.

மார்க் சக்கர்பெர்க் - Mark Zuckerberg



  கூகுளுக்கு கொஞ்சம் தலைவலியை கொடுத்திருந்தாலும் மார்க் நமக்கெல்லாம் மிகவும் அற்புதமான தளத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார். இன்று இணையத்தின் அசூர வளர்ச்சி அளவுகடந்து போவதற்கு முக்கிய காரணம் பேஸ்புக். மார்க் சக்கர்பெர்க் பேஸ்புக்கின் நிறுவனர் ஆவார்.

வயது : 28
மார்க்கின் சொத்து மதிப்பு : $ 13.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

  உலகம் முழுவதும் உள்ள நபர்களிடம் நட்பை வளர்க்கவும் பொழுதுபோக்காகவும் இருக்கும் மென்பொருளை கண்டு அதிகார வர்க்கங்கள் பயந்து கொண்டிருக்கின்றனர்.  சமூக வலைதளங்களே பெரும் விளிப்புணர்வை இன்று அனைவரிடமும் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என்றால்  அது மிகையாகாது. அந்த வகையில் மார்க்கிற்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.



2 comments:

தொழிற்களம் மறுபடியும் செயல்படுவதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More