காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை  தேநீர்
    தொழிற்களம்  குழுவின்    இனிய காலை  வணக்கம்.  தன்னம்பிக்கையும்  விடா முயற்சியும்  ஒருவருக்கு  வெற்றியை  தேடித்தரும்.  தோல்விகள் என்பது தானாக தோன்றுவதில்லை,, கைவிடப்பட்ட விடா முயற்சிகளின் ஒட்டுமொத்த கூட்டமைப்பே தோல்வி ஆகும். தொழில்முனைவோர் இதை மனதில் கொண்டு சோர்வுரும் போதெல்லாம் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு மேலும் அதிக ஆர்வத்தோடு உழையுங்கள். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்கள் கையில்... இதோ இன்றைய காலை தேநீரின் சிந்தனை துளிகள் ...... • பணமில்லாத வியாபாரி,  நிலமில்லாத  விவசாயியைப்  போன்றவன்
 • அனுபவம்,  அறிவின்  முகம்  பார்க்கும் கண்ணாடி.
 • முயற்சி  இல்லாத  வாழ்வு,  துடுப்பு  இல்லாத படகை  போன்றது.
 • உறங்குகின்ற  சிங்கத்தை விட,   அலைகின்ற  நரி  மேலானது.
 • தனக்குத்தானே   கட்டுப்பாடு  விதித்துக்கொண்டு  வாழ்பவனே   சுதந்திரமான  மனிதன்.    

                       
             இந்த நாள் இனிமையான நாளாக அமைய தொழிற்களம் மின்னிதழின்

            வாழ்த்துக்கள். 

     1 comments:

     தேனீரோடு ஊக்குவித்ததை தொழில் களகத்திருக்கு நன்றிகள்

     Post a Comment

     Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More