சிறந்த திரைவிமர்சனம் எப்படி எழுதலாம்?

     இன்று ஒரு படம் ரிலிசாகும் முன்பே பதிவுகளில் உள்ள  விமர்சனத்தை பார்த்து விட்டு படம் பார்க்க முடிவு செய்பவர்கள் தான் அதிகம். இதனால் பெரும் வரவேற்பை   திரைப்பட விமர்சனங்கள் பெருகின்றன என்றால் அது மிகையாகாது.  

      கலாய்த்து, சீரியசாக, மேலோட்டமாக என்று எப்படிப் பட்ட  பதிவாயினும், திரைப்படங்களை குறித்தது என்றால் அதற்கென ஒரு தனி இடத்தை படிப்பவர்களின் மனதில் நிலை கொண்டு விடுகிறது சினிமா. ஒரு நல்ல திரைவிமர்சனம் அந்த படைப்பாளியை ஊக்கப்படுத்த மட்டும் அல்ல அவரை தொட்டு மற்ற படைப்பாளிகளை உத்வேகம்  கொள்ளவும் பயனளிக்கும்.


    தொழில்முறையில் சினிமா விமர்சனங்கள்  இன்று ஊடகங்களுக்கு முக்கியத்துவமாகவே அமைந்து வருகின்றன. அந்த வகையில் நீங்கள் திரைவிமர்சனம் எழுத வேண்டுமா? இதோ சில ஆலோசனைகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டரை மணி நேர இந்திய சினிமாக்கள் உலக அளவில் இன்னும் ஓரு  புதிய  பரிணாமமாகவே ஜொளிக்கிறது. 

            வெள்ளித்திரை விமர்சனங்கள் ஒரு புள்ளியில் ஆரம்பித்து பிரளயமாய் உங்கள் எழுத்தில் பரிணமிப்பது மிக அவசியம். ஒரு சராசரி படத்தை பற்றிய விமர்சனம் என்றாலும் அது படிப்பவர்களுக்காகவே எழுதப்படுகிறது என்பதை மனதில் முதற்கட்டமாக பதியவைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு சராசரி ரசிகனின் உணர்வுடனே உங்கள் விமர்சனத்தை எழுத தொடங்க வேண்டும்.

  • மேம்போக்காக எழுதாமல், தயாரிப்பாளர்கள், இயக்குனரின் கருத்து  என்ன என்பதை குறித்து உங்களின் கவனம் அடுத்ததாக இருக்கட்டும். காரணம், அன்பே சிவம் போன்ற படங்கள் ரிலிசானபோது தோற்றும் கூட, இன்று மக்களின் நல்ல ஆதரவை பெற்றிருக்கின்றன. 


  • மசாலா படங்கள் என்றாலே லாஜிக் தேவைப்படாது என்பது நம்முடைய இயக்குனர்களின் எண்ணம். பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் படங்களில் லாஜிக் பற்றி  எழுதி போரடிக்காமல், அதன் டெக்னிக்கல் விபரங்கள், பின்னனி இசை, ஸ்கிரின்பிளே போன்றவற்றின் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.


  • தனிப்பட்ட முறையில் யாரையும் உங்கள் மனதில் நிறுத்தி எழுதாமல்  சரியான புள்ளிகளை ஒவ்வொரு இடத்திலும் வழங்க வேண்டும். குறிப்பிட்ட நடிகர், நடிகை, இயக்குனரின் தனி வாழ்வை குறித்த உங்களின் புரிதல்களை படத்துடன் ஒன்றி பார்த்து விமர்சனம்  எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மக்கள் ஏமாளிகள், எதை சொன்னாலு நம்புகிறார்கள் என்ற எண்ணம்  அறவே வேண்டாம். கைதட்டி கூட்டம் சேருவது உங்கள் எழுத்துக்கு மரியாதையை நிச்சயமாக நெடுநாட்களுக்கு தராது. மாறாக, நடுநிலையான விமர்ச்சனங்கள் கொடுங்கள், ஒன்றிற்கு இரண்டு முறை படத்தை பார்த்து எழுத துவங்குங்கள்.


அங்காங்கே, காமெடி காட்சிகள், பஞ்ச்களை தூவலாக கொடுங்கள் அது  படிப்பவர்களுக்கு போரடிக்காமல் மேற்கொண்டு நகர்த்த பயன்படும்.  

அதிக எதிர்பார்புகளை கொடுத்த படங்கள் தோல்வியை தழுவியதை  கண்டிருக்கிறோம். அதை அப்படியே சொல்லிவிடுவதை தவிர்க்கவும். உங்கள் எதிர்பார்ப்பிற்காக அவர்கள் திரைக்கதை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது தானே உண்மை?

  • சரியான மதிப்பீடு கொடுக்கும் முன்பு டெக்னீசியன்களை பற்றி சொல்வது அவசியம். தொழில்முறையில் ஒரு நல்ல படத்தை உருவாக்குவதற்கு டெக்னீசியன்களின் பங்கே மிக அவசியம். லைட்டிங், சவுண்ட், கேமரா ஏங்கில், எடிட்டிங் என்று உங்கள் கோணத்தை வையுங்கள். 

உதாரனமாக, ஒருவர் " இந்நேரம் அவன் பிளைட்ல புறப்பட்டிருப்பானே?" என்ற டைலாக்கை சொல்வது போன்ற சீனின் பின்னனியில், பிளைட் டேக் அப் ஆகின்ற சப்தத்தை  கொடுத்திருப்பார்கள். அதை சாதரணமாக யாரும் கவனிக்கவே மாட்டார்கள் எனினும்,  அது படம் பார்க்கும் ரசிகனுக்கு தேவைப்படும் புரிதலை மறைமுகமாக கொடுத்துவிடும். இதுபோல, மிக கூர்மையான பாராட்டுதல்களுடன் உங்கள் விமர்ச்சனம் இருந்தால் இன்னும் அதிக வாசகர்களின் ஆர்வத்தை உங்கள் விமர்சனம் பெறும்.

  • முந்தைய திரைப்படங்களின் வரிசையில் இந்த நடிகர், இயக்குனரின் தனித்தன்மை எப்படி மிளிர்ந்திருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்று ஒப்புமை செய்வது தவறில்லை.


  • சுடச்சுட எழுத வேண்டும் என்பதற்காக,, தியேட்டரில் உட்கார்ந்து எழுதி மேலோட்டமான கருத்தை முன்வைக்காதீர்கள். அது உங்கள் எழுத்தின் மீதே எரிச்சலை உண்டாக்கி விடும். இன்றைக்கும் "பாட்ஷா" படம் பற்றி  திரைவிமர்சனம் எழுதினாலும் அது மக்களிடையே பெறும் வரவேற்பை பெறும் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள் தானே?


முக்கியமான படத்தை பார்த்துவிட்டு எழுதுங்கள். உங்களுக்கென்றே தனிபானியை கடைபிடியுங்கள். யாருக்காக இதை  எழுத போகின்றீர்கள் என்பதை வத்து உங்கள் எழுத்து இருக்கட்டும். வாழ்த்துகள்!!

இனி நமது  தொழிற்களத்தில் திரைவிமர்சனத்தையும் எதிர்பார்கலாம்...
தொடர்ந்திருங்கள்1 comments:

ம்ம் நல்ல டிப்ஸ். தொடருங்கள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More