கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் : பகுதி 1
சுஜாதா : எழுத்துலக நாயகன்

எழுத்தாளர் அமரர் சுஜாதாவை தெரியாதவர்களே இருக்க முடியாது . தனது காமெடியான எழுத்துடையாலும் , எளிமையான அறிவியல் செய்திகளாலும் படிப்பவர்களை ஈர்ப்பவர். விஞ்ஞான கதைகள் என்றாலே தலை தெறிக்க ஓடுபவர்களை கூட தன் அழகான , எளிய அறிவியல் எழுத்துகளால் வசிகரித்தவர்.

கதை , கவிதை , கட்டுரை , மரபு கவிதை , ஆன்மிகம் என இவர் எழுதாத தலைப்புகளே இல்லை . பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் இணைந்து சில படங்களுக்கு வசனமும் எழுதினார் .  .இவரின் நாவல்களில் மிக முக்கியமான நாவல் தான் இன்று நாம் பார்க்க போவது ..


என் இனிய இயந்திரா

இந்த கதை 2021 நடப்பதாக எழுதபட்டது. உலகம் முழுவதும் ஒரே ஆளுமையின் கீழ் வந்துவிடும் . நாட்டை ஆழ்பவரை யாரும் எதிர்க்க முடியாது . யார் பெயரும் இரண்டு எழுத்துக்கு மேல் இருக்க கூடாது . வீட்டு விலங்குகள் எதுவும் கிடையாது . அப்படியும் வளர்க்க விரும்பினால் இயந்திர விலங்குகள் தான் வளர்க்கலாம் . அரசு அனுமதியின்றி குழந்தை கூட பெற முடியாது .இந்த கதையின் நாயகன் வளர்க்கும் ஒரு இயந்திர நாயின் பெயர் தான் ஜீனோ .

அது தானாகவே பல புத்தகங்களை படித்து , அதிகபடியான செயற்கை அறிவை பெற்றுவிடும் . நாட்டை ஆழ்பவர்களை எதிர்த்து எப்படி அவர்களை அழிக்கிறது , பின்பு நாட்டில் என்ன நடக்கிறது , ஜீனோ என்ன ஆனது என செல்கிறது கதை .  ஒரு நாயை வைத்து கொண்டு சுஜாதா அடிக்கும் லூட்டிகள் அருமையாக இருக்கும் .

கதாநாயகி நிலாவுடன் இணைந்து சர்வாதிகாரியை அழிக்க போடும் திட்டமாகட்டும் , தன்னை வளர்ப்பவனே வில்லனாக இருப்பதை கண்டுபிடிப்பதாகட்டும் , வில்லன் தன்னை கொல்ல போடும் திட்டங்களை முரியடிப்பதாகட்டும் அனைத்தும் அருமையாக இருக்கும் .

முழுமையான அறிவியல் கதையில் பல கவிதைகள் , காதல் , துரோகம் , நகைசுவை என கலந்து கட்டி அடித்திருப்பார் சுஜாதா . முடிந்தால் புத்தகம் வாங்கி படியுங்கள் , முடியாதவர்களுக்கு

தரவிறக்க லிங்க் இதோ .

(Download Link)டிஸ்கி : இதைதான் சங்கர் முதலில் படமாக நினைத்தார்
        என கேள்விபட்டேன் .

டிஸ்கி : காப்புரிமை பிரச்சனையில் அல்லது வேறு
   காரணத்தால் இந்த புத்தகத்தை தரவிறக்க
   முடியாவிட்டால் rrajja.mlr@gmail.com க்கு மெயில்
   பண்ணுங்கள், உடனே E-Book அனுப்பப்படும் .

டிஸ்கி : சுஜாதா நூல்கள் பற்றி மேலும் தகவல் இருந்தால்
        பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .


5 comments:

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்...

நன்றாக உள்ளது.

பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்... வார்த்தைகளை கையாளும் விதம், சொல்ல வேண்டிய செய்திகளை சொல்லும் விதம் என்று அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி பல உள்ளன.

நன்றி...

நல்ல பதிவு...

வாழ்த்துக்கள்.

மென் புத்தகம் தந்தமைக்கு, நன்றி,

நீண்ட நாட்களாக தேடினேன் நன்றி அன்பரே

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

நல்ல பதிவு தொடருங்கள்.....

உங்களுடைய பதிவு மேலும் பலரை சென்றடைய நண்பனின் பதிவு வலை பூவில் உங்கள் பதிவின் சுருக்கத்தை இணையுங்கள் தொடர்புக்கு

http://nanpaninpathivu.blogspot.com/2012/09/blog-post.html

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More