நெட் நியூட்ராலிட்டி (இணையச்சமநிலை) தேவையில்லை... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்

  இணையம் உபயோகிப்பாளர்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களான பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் என்று பயன்படுத்துவதில் தொடங்கி இணையத் தேடுதல் ஆன்லைன் வணிகத்தளங்களான ஃப்ளிப்கார்ட் அமேஸான் ஸ்நாப்டீல்; போன்றவற்றிலும் மின்னஞ்சல் சேவைக்கு பெரும்பாலும் ஜிமெயில் மற்றும் அது தொடர்பான மற்ற சேவைகளான யூடியூப் கூகுள்டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.இன்னும் சிலர் ஆன்லைனிலிருந்து திரைப்படங்களை ஓசியில் பதிவிறக்கிப் பார்த்து வருகிறார்கள்.ராயல்டி தொடர்பான அனைத்து விஷயங்களும்  நேர்வழியிலும் திருட்டுத்தனமாகவூம் பைரஸிக்குள்ளாகி வருகின்றன.
 இது போன்ற இணையப் பயன்பாடு இன்றைக்கு அனைவரிடத்திலும் இருக்கிறது.வாட்ஸ்அப் என்பது ஒருவரின் மூச்சுக்காற்று போலவே ஆகி விட்டது.எதை ரோட்டில் வெள்ளரிப்பிஞ்சு வாங்குவதாக இருந்தாலும் மொபைலில் ஃபோட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் வீட்டுக்கு அனுப்பி ஒபினியன் கேட்டு வாங்கும் பழக்கம் கூட வந்திருக்கிறது.பரிட்சை கேள்வித்தாள் பற்றி இங்கே குறிப்படாமல் விட்டு விடுகிறேன்.
 இணையம் என்பது முதன்முதலாகப் புழக்கத்திற்கு வந்தபோது தமிழில் அனைத்தையூம் தரவேண்டுமென்ற அர்ப்பணிப்பு உணர்வூடன் பலபேர் பாடுபட்டு அனைத்தையூம் இலவசமாகக் கொண்டு வந்தார்கள்.ஆனால் இது எங்கே கொண்டுபோய் விட்டு விட்டது என்றால் இணையத்தில் எதைக் கொண்டு வந்தாலும் இலவசமாகக் கொடு என்று பயனாளிகள் அதிகாரமாகக் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.ஜிமெயிலுக்கெல்லாம் எப்போதோ கட்டணம் கொண்டு வந்திருக்க வேண்டும்.எத்தனை நாளைக்கு விளம்பர வருவாயை கூகுள் நம்பிக்கொண்டிருக்க முடியூம்.
 வீட்டில் அறைக்கொரு டிவி இருந்தாலும் அரசாங்கத்தில் இலவச டிவி கொடுப்பதாக அறிவித்தால் முதல் ஆளாகப் போய் நிற்பவன்தான் நம்ம தமிழன் என்று அடுத்த மாநில மக்கள் கேலி செய்யூம் நிலையில் நமது மனநிலை இருக்கிறது.
 கட்டணம் வந்து விட்டால் இரண்டு நல்ல விஷயம் நடக்கும்.ஒன்று சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.இரண்டாவதாக போலிகள் இணையத்தை விட்டு ஓடிப்போய் விடுவார்கள்.பேஸ்புக்கில் கூட பல கணக்குகள் காலியாகி விடும்.நாம் அடிக்கடி சொல்வதுண்டு.கொடுத்தால்தான் எதுவூம் கிடைக்கும் என்று.கொடுக்கிற மனநிலை இல்லாத யாசக மனநிலையிலிருந்து நமது ஆட்கள் முதலில் விடுபட வேண்டும்.
 அதுதான் கௌரவமாகவூம் அந்தஸ்தாகவூம் இருக்கும்.எதையூம் கட்டணம் செலுத்திப் பெற்றுப் பாருங்கள்.நீங்களே உங்களை உயர்வாக உணர்வீர்கள்.
 எனவே நெட் நியூட்ராலிட்டி தேவையில்லை.
 கட்டணம் செலுத்த தயாராவோம். http://bullsstreetdotcom.blogspot.in

1 comments:

வாட்ஸ் அப் வந்ததில் இருந்து என் நண்பர் 3 மணிக்கு மேல் தான் தூங்க செல்கிறார் .

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More